தாவூத் கும்பலுடன் தொடர்பு எம்.பி., மீது சிவசேனா புகார்

Updated : ஏப் 28, 2022 | Added : ஏப் 28, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
மும்பை,: 'நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கும்பலோடு தொடர்பு வைத்து உள்ள யூசுப் லக்டாவாலா விடம், சுயேச்சை எம்.பி., நவ்நீத் ராணா கடன் வாங்கியுள்ளது பற்றி அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்' என, சிவசேனா கூறியுள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அமராவதி லோக்சபா
தாவூத் கும்பல், தொடர்பு  எம்.பி.,   சிவசேனா புகார்

மும்பை,: 'நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கும்பலோடு தொடர்பு வைத்து உள்ள யூசுப் லக்டாவாலா விடம், சுயேச்சை எம்.பி., நவ்நீத் ராணா கடன் வாங்கியுள்ளது பற்றி அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்' என, சிவசேனா கூறியுள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள அமராவதி லோக்சபா தொகுதியின் சுயேச்சை எம்.பி.,யாக, நவ்நீத் ராணா உள்ளார். இவரது கணவர் ரவி ராணா, அமராவதி தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.


latest tamil news



இவர்கள் இருவரும், முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டு முன், அனுமன் சாலிசா பாடப்போவதாக சமீபத்தில் அறிவித்தனர். இதையடுத்து, இருவரும் 24ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதிகாரர் தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர், திரைப்பட பைனான்சியர் யூசுப்
லக்டாவாலா. இதற்காக கைது செய்யப்பட்ட இவர் மும்பை ஆர்தர் சிறையில் கடந்த ஆண்டு இறந்தார்.லக்டாவாலாவிடம், சுயேச்சை எம்.பி.,யும், முன்னாள் நடிகையுமான நவ்நீத் ராணா, ௮௦ லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அவருடைய சட்ட விரோதப் பணம், நவ்நீத்தின் வங்கிக் கணக்கில் உள்ளது. நவ்நீத்தை காப்பாற்ற துடிக்கும் பா.ஜ., இது பற்றி அமலாக்கத் துறை விசாரிக்க, மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்க
வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஏப்-202218:59:59 IST Report Abuse
பேசும் தமிழன் பொய் சொல்லலாம்.... ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது.... தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்பு என்று... உள்ளே இர்ருக்கும் மந்திரி யார்... எந்த கூட்டணியில் இருக்கிறார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
28-ஏப்-202210:05:54 IST Report Abuse
duruvasar தாவூத் இப்ராஹிம் தொடர்பு என்றால் அப்போ இந்த எம்பியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சக எம் பியான் சுப்ரியா சுவே காப்பாற்றிவிடுவார். கவலை வேண்டாம்.
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
28-ஏப்-202210:03:09 IST Report Abuse
ThiaguK கடன் வாங்கி விட்டால் தொடர்பாகுமா .அப்படி என்றால் இத்தாலிய கூட்டணி தயவில் உள்ள நீங்கள் தேச விரோதி என்று சொல்லலாமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X