பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் மீது தக்காளி வீச்சு

Added : ஏப் 28, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
பாரிஸ் : இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரான், 44, மீது மர்ம நபர் தக்காளி வீசிய சம்பவம் நடந்தது. பிரான்ஸ் நாட்டிற்கு கடந்த சில வாரங்களுக்கு முன் தேர்தல் நடந்தது. இதில், எல்.ஆர்.இ.எம்., எனப்படும் லா ரிபப்ளிக் என் மார்செல் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான இமானுவேல் மேக்ரான், பிரதான எதிர்க்கட்சியான ஆர்.என்., எனப்படும் நேஷனல்
பிரான்ஸ். அதிபர் மெக்ரோன்   தக்காளி வீச்சு

பாரிஸ் : இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரான், 44, மீது மர்ம நபர் தக்காளி வீசிய சம்பவம் நடந்தது.

பிரான்ஸ் நாட்டிற்கு கடந்த சில வாரங்களுக்கு முன் தேர்தல் நடந்தது. இதில், எல்.ஆர்.இ.எம்., எனப்படும் லா ரிபப்ளிக் என் மார்செல் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான இமானுவேல் மேக்ரான், பிரதான எதிர்க்கட்சியான ஆர்.என்., எனப்படும் நேஷனல் ரேலி கட்சியின் மரின் லீ பென், 53, உட்பட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இமானுவேல் மேக்ரான் 58 சதவீதத்துக்கு மேல் ஓட்டுகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வானார்.


பிரான்ஸ் அதிபர் மீது தக்காளி வீச்சு! .....

latest tamil news




தேர்தல் வெற்றியை கொண்டாட வேண்டி நேற்று அதிபர் மெக்ரோன், பாரிசின் வடமேற்கில், செர்ஜி பகுதியில் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் மீது குறிவைத்து எங்கிருந்தோ தக்காளி வீசப்பட்டது.உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் தயாராக வைத்திருந்த குடையை விரித்து மெக்ரோனை அங்கிருந்த பத்திரமாக அழைத்துச்சென்றனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த அக்டோபரில் லியோன் நகர் சென்றிருந்த போது மெக்ரோன் மீது முட்டை வீசப்பட்டது. அதேபோல், சில மாதங்களுக்கு முன்பு, மென்ரோன் கன்னத்தில் ஒருவர் அறைந்தார்.இப்போது தக்காளி வீச்சு தாக்குதலுக்குள்ளாகினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu - chennai,இந்தியா
28-ஏப்-202215:12:11 IST Report Abuse
Visu எங்க திராவிட நாடாக இருந்தால் தக்காளி எறிந்தவர் சட்னியாகியிருப்பார்
Rate this:
Cancel
maharaja - திருநெல்வேலி,இந்தியா
28-ஏப்-202212:57:19 IST Report Abuse
maharaja வளர்ந்த நாடுகளில் விமர்சனம் தக்காளி முட்டை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விமர்சனம். நம் நாடும் அவ்வாறே இருந்தது. இப்போது ஏன் என்றால் சிறை வாசம் என்றாகி விட்டது. இது ஒரு வளர்ந்த நாட்டுக்கான அறிகுறி அல்ல
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
28-ஏப்-202211:05:41 IST Report Abuse
Samathuvan கூடியவிரைவில் நாங்களும் இதையே எதிர்பார்க்கிறோம் அது அவர்களுக்கு ரொம்ப பிடித்த சாணியை கொண்டே நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X