எல்.ஐ.சி., புதிய பங்கு வெளியீடு அறிவிப்பு : கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

Added : ஏப் 28, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி :பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., மே 4ம் தேதி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பங்கு வெளியீடுகளில், இதுவே மிகப் பெரிய வெளியீடாகும்.முக்கியமான அம்சங்கள்:* புதிய பங்கு வெளியீடு, மே 4ம் தேதி துவங்கி 9ம் தேதியுடன் முடிவடைகிறது* ஒரு பங்கின் விலை 902 - 949 ரூபாய் என
எல்.ஐ.சி., புதிய பங்கு , முக்கிய அம்சங்கள்


புதுடில்லி :பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., மே 4ம் தேதி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பங்கு வெளியீடுகளில், இதுவே மிகப் பெரிய வெளியீடாகும்.


முக்கியமான அம்சங்கள்:



* புதிய பங்கு வெளியீடு, மே 4ம் தேதி துவங்கி 9ம் தேதியுடன் முடிவடைகிறது

* ஒரு பங்கின் விலை 902 - 949 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது

* பங்கு வெளியீட்டின் போது, 22.13 கோடி பங்குகள் அதாவது, 3.5 சதவீத பங்குகளை அரசு விற்பனை செய்ய உள்ளது

* இதன் வாயிலாக, 20 ஆயிரத்து, 557 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது

* இதற்கு முன், 60 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், புவிசார் அரசியல் சூழல் காரணமாக, தற்போது 21 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்து அறிவிக்கப்பட்டு உள்ளது

* முதலீட்டாளர்கள், 15 பங்குகள் அல்லது மடங்கில் வாங்கலாம்

* பாலிசிதாரர்களுக்கு பங்கின் விலையில், 60 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்

* சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களுக்கு, 45 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்
* பங்கு வெளியீட்டில், பாதி அளவு தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும்; 15 சதவீத பங்குகள் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும்; மீதி, சில்லரை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்படும்

* முதலீட்டாளர்களுக்கு, மே 12ம் தேதி பங்குகள் வழங்கப்படும்

* பங்குகள் கிடைக்காதவர்களுக்கு, அன்றைய தினமே பணம் திருப்பி வழங்கப்படும்
* மே 17ம் தேதியன்று, பங்குகள் சந்தைகளில் பட்டியலிடப்படும்

* இந்த பங்கு வெளியீட்டை ஒட்டி, ஏராளமானோர் 'டிமேட்' கணக்கை துவங்க முன்வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது
* இந்தியாவின் மிகப் பெரிய புதிய பங்கு வெளியீடு இதுவாகும். இதற்கு முன் அதிகபட்சமாக, 'பேடிம்' நிறுவனம், கடந்த ஆண்டில், 18 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவிலான பங்கு வெளியீட்டுக்கு வந்தது

* தற்போதைய சந்தை சூழல்களை மனதில் கொண்டு, முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீடாக இதை மேற்கொள்வது நலன் பயப்பதாக இருக்கும் என்கிறார்கள், நிபுணர்கள்.



latest tamil news




சந்தையின் தேவை, சந்தையின் ஏற்ற - இறக்கங்கள், உள்நாட்டு முதலீடுகள், நிறுவனத்தின் நிதி செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டே, பங்கு வெளியீட்டுக்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
துஹின் காந்த பாண்டே, செயலர், முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
28-ஏப்-202213:32:24 IST Report Abuse
Samathuvan இது போல நஷ்டத்துலே இருக்கிற நம்ம இந்தியாவையும் எப்போ பங்கு போடுறது எசமான், காத்துக்கிட்டு இருக்கோம் எசமான்.
Rate this:
Cancel
K RAGHAVAN - chennai,இந்தியா
28-ஏப்-202209:05:40 IST Report Abuse
K RAGHAVAN good information
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X