நிறுத்தாமல் சென்ற லாரி முன் தொற்றிச்சென்ற சுங்கச்சாவடி ஊழியர் | Dinamalar

நிறுத்தாமல் சென்ற லாரி முன் தொற்றிச்சென்ற சுங்கச்சாவடி ஊழியர்

Updated : ஏப் 28, 2022 | Added : ஏப் 28, 2022 | கருத்துகள் (12) | |
கர்னூல்: ஆந்திராவில் சுங்க கட்டணம் செலுத்த நிற்காமல் சென்ற லாரி முன் சுங்கச்சாவடி ஊழியர் தொற்றிக்கொண்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உருளைக்கிழங்கு ஏற்றிய ஒரு லாரி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிக்கு வந்தது. அந்த லாரி டிரைவர் 'பாஸ்ட்டேக்' மூலம் கட்டணம் செலுத்த இயலவில்லை. அதைத் தொடர்ந்து அபராதமாக ஒரு தொகை செலுத்துமாறு
நிறுத்தாமல் சென்ற லாரி, சுங்கச்சாவடி ,ஊழியர்

கர்னூல்: ஆந்திராவில் சுங்க கட்டணம் செலுத்த நிற்காமல் சென்ற லாரி முன் சுங்கச்சாவடி ஊழியர் தொற்றிக்கொண்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உருளைக்கிழங்கு ஏற்றிய ஒரு லாரி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிக்கு வந்தது. அந்த லாரி டிரைவர் 'பாஸ்ட்டேக்' மூலம் கட்டணம் செலுத்த இயலவில்லை. அதைத் தொடர்ந்து அபராதமாக ஒரு தொகை செலுத்துமாறு லாரி டிரைவரிடம் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் கேட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


latest tamil news


உடனே லாரியை அங்கிருந்து ஓட்டிச்செல்ல டிரைவர் முயன்றார். அதைத் தடுக்க சுங்கச்சாவடி ஊழியர் லாரியின் குறுக்கே நின்றார். ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்செல்ல , திகைத்துப்போன ஊழியர் லாரியின் முன்புற பம்பரில் ஏறி தொற்றிக்கொண்டார்.


அதன் பின்னரும், லாரியை நிறுத்தாத டிரைவர் சுமார் 10 கி.மீ. வரை ஒட்டிச்சென்றார். அதுவரை உயிரை கையில் பிடித்தபடி லாரி முன்புற கம்பியை கெட்டியாய் பற்றிக்கொண்டிருந்த சுங்கச்சாவடி ஊழியர். இதன் வீிடியோ காட்சி சமூக வலைதளங்களில் வரைலாக பரவியது. தகவல் அறிந்து வந்த போலீசார், லாரியை துரத்தி ஒருவழியாக மடக்கி பிடித்து, டிரைவரை கைது செய்து, சுங்கச்சாவடி ஊழியரை பத்திரமாக மீட்டனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X