முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பிரதமர்: ஸ்டாலின்

Updated : ஏப் 28, 2022 | Added : ஏப் 28, 2022 | கருத்துகள் (125) | |
Advertisement
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமரின் குற்றச்சாட்டு, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் அமைந்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று(ஏப்.,27) வீடியோ கான்பரன்சிங் முறையில் கூட்டம் நடத்தினார். அப்போது, பெட்ரோல், டீசல் விலையை
DMK, Stalin, TN Assembly,MK Stalin, திமுக,ஸ்டாலின்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமரின் குற்றச்சாட்டு, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் அமைந்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று(ஏப்.,27) வீடியோ கான்பரன்சிங் முறையில் கூட்டம் நடத்தினார். அப்போது, பெட்ரோல், டீசல் விலையை குறிப்பிட்டு சில மாநிலங்கள் குறைப்பதற்கான வழிவகையை செய்யவில்லை எனக்கூறினார். பெட்ரோல், டீசல் விலை குறைவுக்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு சில மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை என்றும், பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசு விதிக்கும் வரியை குறைக்காததால்தான் நாட்டில் விலையை குறைக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டார்.



இதைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் கருத்து தெரிவித்துள்ளார். 2014இல் ஆட்சிக்கு வந்தபோது கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவில் சரிந்தாலும், அதற்கேற்றது போல் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல், அதன் உபரி வருவாய் முழுவதையும் மத்திய அரசு தனதாக்கி கொண்டுள்ளது.


latest tamil news




பெட்ரோல், டீசல் விலை மீது விதிக்கப்படும் கலால் வரியானது மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கக் கூடியது என்ற காரணத்தால், அதை குறைத்து மாநில அரசுகள் வருவாயில் கை வைத்தது மத்திய அரசு. பிற வரிகளை மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்க தேவையில்லை என்பதால், அதை கடுமையாக உயர்த்தி மக்களுக்கு சுமையை திணித்து அதில் கிடைக்கும் வருவாயை தனதாக்கி கொண்டது மத்திய அரசு. சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பதற்காக பாசாங்கு காட்டுவதற்காக அதிரடியாக பெட்ரோல், டீசல் மீதான விலையை 5 ரூபாய் குறைத்து வேடம் போட்டது. தேர்தல் முடிந்த பிறகு மளமளவென விலை உயர்த்தியது.



ஆனால், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல, பெட்ரோல் மீதான மாநில வரியை தமிழக அரசு குறைத்தது. இது அனைத்தும் தமிழக மக்களுக்கு தெரியும். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் முனைப்பு காட்டுவது யார்? நாடகமாடுவது யார்? என்ற முடிவை மக்களிடம் விட்டு விடுகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.



நிதியமைச்சர் விளக்கம்


பின்னர் நிதியமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:


எந்தவொரு அரசும் வருமானம் இல்லாமல் செயல்பட முடியாது என்பது உண்மை. உற்பத்தியில் வருமானம் குறைவாக வருகிறது. இதனால், மக்களுக்கு அதிகம் செய்ய முடியவில்லை. பெட்ரோல், டீசல் யார் எவ்வளவு போடுகிறார்கள் என்பது தெரியாது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால், பணவீக்கம் அதிகரித்து பொருளாதாரம் பாதிக்கும். திமுக ஆட்சி வந்த பிறகு, பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது தான் வரலாறு. உயர்த்தியது கிடையாது. கருணாநிதி ஆட்சியில் 3 முறையும், தற்போது ஒரு முறையும் வரி குறைக்கப்பட்டுள்ளது.


latest tamil news



மக்களை பாதிக்கும் வகையில் உயர்த்தியது மத்திய அரசு தான். மாநில அரசின் வரி 50 சதவீதம் மத்திய அரசின் வரி 300 சதவீதம் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அதிக அளவில் உயர்த்தியது மத்திய அரசு தான். பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் மீதான வரி 7 மடங்கு அதிகரித்துள்ளது.



பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு அதிகரிக்கும் போது எல்லாம் நாங்கள் அதிகரிக்கவில்லை. அப்படி இருக்கையில், குறைக்கும் போது எல்லாம் குறைக்க வேண்டும் என்பது நியாயமில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் குறைக்கவில்லை என்பது தவறு. அவர்கள் குறைப்பதற்கு முன்னர் நாங்கள் குறைத்துள்ளோம். மொத்த வருமானத்தில் 20 சதவீதம் நிதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளிக்கவில்லை. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது மத்திய அரசு. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (125)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kunar - ,
28-ஏப்-202219:26:36 IST Report Abuse
kunar பொய் சொல்லுவத்திற்கு கூடவா துண்டு சீட்டு தேவைப்படும் அது சரி நாங்கள் தான் பொய்யை தவிர வேறு எதுவும் பேசுவதில்லையே
Rate this:
Cancel
kunar - ,
28-ஏப்-202219:21:26 IST Report Abuse
kunar மத்திய அரசாவது வரியை ராணுவம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் உரமான்யம், ரேஷன் பொருள்கள் என்று பலவற்றுக்கும் செலவிடுகிறது ஆனால் இவர்களோ அரசு பணியாளர்களுக்கே பெரும்பான்மையான நிதியை செலவு செய்கிறார்கள் உருட்டுகள் பலவிதம் ஆனால் இவர்கள் உருட்டும் உருட்டுகள் தான் தலை சிறந்தவை
Rate this:
Cancel
kunar - ,
28-ஏப்-202219:11:29 IST Report Abuse
kunar பொய்யை சொன்னாலும் பொறுந்த சொல்லனும் போக்கத்த பசங்களா என்று தொளபதி சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X