பெட்ரோல், டீசல் மானியமாக ரூ.1500 கோடி செலவு: பிரதமருக்கு மம்தா பதில்

Updated : ஏப் 28, 2022 | Added : ஏப் 28, 2022 | கருத்துகள் (30) | |
Advertisement
கோல்கட்டா: கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மானியமாக ரூ.1,500 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு, மேற்கு வங்கத்திற்கு ரூ.97 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் எனவும் பிரதமருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலளித்துள்ளார்.பெட்ரோல், டீசல் மீதான, 'வாட்' எனப்படும் மதிப்புக்கூட்டு வரியை குறைக்குமாறு மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு முன் கோரிக்கை விடுத்தும், தமிழகம்,
WestBengal Govt, Spent, Fuel Subside, Mamata, Slams, PMModi, மேற்குவங்கம், பெட்ரோல், டீசல், மானியம், செலவு, மம்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா: கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மானியமாக ரூ.1,500 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு, மேற்கு வங்கத்திற்கு ரூ.97 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் எனவும் பிரதமருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலளித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான, 'வாட்' எனப்படும் மதிப்புக்கூட்டு வரியை குறைக்குமாறு மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு முன் கோரிக்கை விடுத்தும், தமிழகம், தெலுங்கானா, மேற்குவங்கம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் வரியை குறைக்காமல் சாமானிய மக்களுக்கு அநீதி இழைப்பதாக பிரதமர் மோடி நேற்று (ஏப்.,27) குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு அந்தந்த மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: பிரதமர் மோடியின் பேச்சு முற்றிலும் ஒருதலைபட்சமானது மற்றும் அவர் கூறிய கருத்துகள் தவறானது.


latest tamil news


மேற்குவங்க அரசு, பெட்ரோல், டீசலுக்கு மானியமாக மத்திய அரசுக்கு லிட்டருக்கு ஒரு ரூபாய் வழங்குகிறது. அந்தவகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.1,500 கோடி செலவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு மேற்குவங்கத்திற்கு ரூ.97,000 கோடி வழங்க வேண்டும். அதில், பாதி தொகையை எங்களுக்கு கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறோம். அப்படி மேற்குவங்க அரசுக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்தால், பா.ஜ., ஆளும் மாநிலங்களை விட அதிக மானியம் வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.sthivinayagam - agartala,இந்தியா
28-ஏப்-202217:46:19 IST Report Abuse
T.sthivinayagam ஜெயலலிதா அம்மையார் சொன்னது போல இந்த லேடி பெரியவங்க தான் போல.பொய்கள் எத்தனை நாள் நீடிக்கும்.
Rate this:
Cancel
28-ஏப்-202217:22:43 IST Report Abuse
ராஜா மத்திய அரசு உங்களுக்கு குறைத்துக்கொடுத்ததை ஏன் மக்களுக்கு கொடுக்கவில்லை என்பதே கேள்வி? அதற்கான பதில் திருடனுக்கு தேள் கொட்டிய பின் வருவது தான் ஆச்சரியம். இதை ஏன் மூன்று மாதங்களாக வாய் திறக்கவில்லை. வந்த வரை லாபம் என்னும் எண்ணம் தானே!? இப்போது பிரதமர் உண்மையை சொன்னவுடன் தங்கள் அருமை பெருமைகளை காப்பாற்ற இப்போ புருடா.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
28-ஏப்-202216:55:02 IST Report Abuse
sankar மானியம் எதுக்கு - கொள்ளை அடிக்கத்தான் - வரியை குறை தாயி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X