அந் நாட்டில் ஆறிருந்ததே.

Updated : ஏப் 28, 2022 | Added : ஏப் 28, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சிவபெருமானை தன்னுடைய தோழனாக கருதி வழிபட்ட சுந்தரமூர்த்தி நாயனார், தொண்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு விருதாச்சலத்தை கடந்து செல்லும் பொழுது, "எம்மை மறந்தனையோ சுந்தரா?"என்னும் அசரீரி கேட்டு, அருகில் எங்கேயோ சிவாலயம் இருக்க வேண்டும் ஆனால் அதற்கு எப்படி செல்வது என்பது தெரியவில்லையே..?" என்று மயங்கி நின்றார்,அப்போது அங்கு வயதுlatest tamil news


சிவபெருமானை தன்னுடைய தோழனாக கருதி வழிபட்ட சுந்தரமூர்த்தி நாயனார், தொண்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு விருதாச்சலத்தை கடந்து செல்லும் பொழுது, "எம்மை மறந்தனையோ சுந்தரா?"என்னும் அசரீரி கேட்டு, அருகில் எங்கேயோ சிவாலயம் இருக்க வேண்டும் ஆனால் அதற்கு எப்படி செல்வது என்பது தெரியவில்லையே..?" என்று மயங்கி நின்றார்,அப்போது அங்கு வயது முதிர்ந்த தம்பதியினராக வந்த இறைவனும், இறைவியும் சுந்தரரை விருத்தாச்சலம் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.
விருத்தாச்சலத்தில் குடிகொண்டு இருக்கும் சிவபெருமான் மீது பாடல்கள் பாடிய சுந்தரருக்கு,பெருமான் தங்க கட்டிகளை தானமாக வழங்குகிறார். தனியாகச் செல்லும் தான் எப்படி தங்கக் கட்டிகளை எடுத்துச் செல்வது என்று தயங்கிய சுந்தரர், சிவபெருமானிடம், "இந்த தங்க கட்டிகளை நான் இங்கு ஓடும் திருமணிமுக்தா நதியில் போடுகிறேன், அவைகளை திருவாரூரில் இருக்கும் கமலாலயம் திருக்குளத்தில் கிடைக்கும்படி அருள வேண்டும்" என்று வேண்டுகிறார். சிவபெருமானும் அதற்கு ஒப்புக்கொள்ள அவரளித்த தங்க கட்டிகளை திருமணிமுக்தா நதியில் போட்டு விடுகிறார்.
திருவாரூருக்கு திரும்பிச் சென்ற, சுந்தரர் தன் மனைவியாகிய பரவை நாச்சியாரிடம் இந்த விஷயத்தை கூறி, அவரையும் கமலாலயத்திற்கு அழைக்கிறார். அவர் கூறியதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவருடன் செல்கிறார் நாச்சியார். திருவாரூர் தியாகேசனையும், அங்கிருக்கும் விநாயகரையும் வணங்கி, கமலாலயம் குளத்தில் மூழ்கி தான் மணிமுக்தா ஆற்றில் போட்ட தங்க கட்டிகளை தேடுகிறார், அவருக்கு கிட்டவில்லை. மீண்டும் ஒரு முறை மூழ்கி தேடுகிறார், அப்போதும் கிட்டவில்லை, இதைப்பார்த்த பரவை நாச்சியார்,"ஆற்றில் இட்டதை குளத்தில் தேடுவதோ" என்று கேலியாக நகைத்தாராம்.
உடனே சுந்தரமூர்த்தி, சிவபெருமானிடம்,"என் மனைவி என்னை கேலி செய்யும்படி வைத்து விட்டாயே இறைவா, இது சரியில்லை, எனக்கு அந்த பொற்கட்டிகளை தந்தருள வேண்டும்" என்று வேண்ட, தங்க கட்டிகள் கமலாலயம் குளத்தில் கிட்டின.
"ஆற்றில் இட்டதை குளத்தில் தேடுவதோ" என்ற வெறும் சொலவடைக்காக மட்டும் சொல்லப்பட்ட கதை அல்ல இது,திருமணிமுத்தா நதியின் பெருமையை விளக்குவதற்காகவும் கூறப்படும் கதையாகும்.
பல விவசாயிகளின் குடும்பம் செழிக்க செழித்து ஓடிய திருமணிமுத்தா நதி கடலுார் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே இப்போதும் இருக்கிறது ஆனால் ஆற் றில் நீர் இல்லை மாறாக பிளாஸ்டிக் கழிவுகளே நிறைந்து இருக்கிறது.
எதன் துள்ளல் அதிகம் ஆற்றின் துள்ளலா? அல்லது அதில் நீந்திக் குதுாகலிக்கும் மீனின் துள்ளலா? என்று முடிவெடுக்க முடியாமல் ஆச்சரியப்பட்டு பார்க்கின்ற அளவிற்கு அழகாக கரை புரண்டு ஒடிய திருமணிமுத்தா நதியில் இப்போது நிறைந்து காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கண்டு மனம் வேதனையுறுகிறது.இயற்கை மனிதனைக் காப்பாற்றக் கொடுத்த மிகப்பெரிய வரம்தான் நதி,முயன்றாலும் நம்மால் உருவாக்க முடியாத நதியை காப்பாற்றவாவது இந்த மனிதன் முற்பட வேண்டாமா?
இங்கிருந்துதான் ஒரு காலத்தில் பல விவசாய நிலங்களுக்கு நீர் போய்க்கொண்டு இருந்தது
இங்கிருந்துான் பல வீடுகளின் குடிநீர் தேவை தீர்க்கப்பட்டு வந்தது


latest tamil news


இங்கிருந்துதான் பல கோவில் குளங்களுக்கு நீர் கொண்டு போகப்பட்டது பின் புனித நீராக தீர்த்தமாக மாறி பக்தர்களின் பிரச்னைகளுக்கு ஆறுதல் தந்தது மருந்தாக செயல்பட்டு மாறுதல் கொடுத்தது.
ஆனால் இப்போது கண்ணுக்கு எட்டிய துாரம் வரை வறண்டு காணபடுகிறது ,ஐநுாறு ஆண்டுகளானாலும் மக்காதது பிளாஸ்டிக் என்று தெரிந்தும், நீர்வரும் மற்றும் ஊரும் பாதையில் பிளாஸ்டிக்கை போட்டு நிரப்பியுள்ளனர், அடுத்த தலைமுறைக்கு குடிக்க என்ன கொடுக்கப் போகிறோம்.
திருமணிமுத்தா நதியின் மரண ஓலம் பேராசையுடன் ஓடிக்கொண்டு இருக்கும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் காதில் விழுமா?
-எல்.முருகராஜ்படம்:கருணாகரன்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharmavaan - Chennai,இந்தியா
01-மே-202206:55:23 IST Report Abuse
Dharmavaan மூடர்கள் ஜாதி மொழி வெறி பிடித்து இது போல் கேவலங்களை தேர்வு செய்வது நிற்காதவரை இது மாறாது.
Rate this:
Cancel
30-ஏப்-202213:24:47 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இதுதானுங்கோ திராவிட மாடல்... (காமராஜர் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா ????) ..
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-ஏப்-202207:46:02 IST Report Abuse
Lion Drsekar "திருமணிமுத்தா நதியின் மரண ஓலம் பேராசையுடன் ஓடிக்கொண்டு இருக்கும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் காதில் விழுமா?" மனிதன்தான் அரசியல்வாதிகளிடத்தில் மண்டியிட்டு பிழைப்பு நடத்தவேண்டிய நிலை என்றால் , இறைவனுக்கும் இயற்கைக்கும் அதே கதி என்பதை மிக அழகாக புகைப்படத்துடன் மிக நுட்பமாக நாகரீகமாக வெளிக்கொணர்ந்த ஐயா தங்களுக்கு நன்றி, தினம் தினம் மக்களின் வரிப்பணத்தில் குளிர்சாதனக வானங்களில் பவனி வரும் மூன்றெழுத்து மற்றும் அதற்க்கென இருக்கும் துறையினர்களின் கண்களில் எதுவுமே படாதா, காதுகளில் எதுவுமே விழாதா, இது போன்ற கொடூரமான காட்சிகளை அன்றாடம் கண்டு வரும் பொதுமக்கள் கொடுக்கும் புகாருக்கு மதிப்பில்லை, மூன்று நிலைகளில் டெல்லிக்கு, குறுநில ஆட்சிக்கு, மற்றும் மக்களுக்கு என்று பணிசெய்ய தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே வெளிவருவதுதான் வாடிக்கையாகய்ப்போனது, இது ஏதோ ஒரு புகைப்படம், ஒரு செய்தி என்பதல்ல, இதன் பின்னணியில் எவ்வளவு ஒரு புனிதம் இருக்கிறது, ஆன்மிகம் இருப்பதால் அது வளரக்கூடாது என்பதால் இப்படி ஒரு நிலையா என்று நினைத்தால் அதுவும் இல்லை குடிநீர் ஆதாரங்களில் மற்றும் ஓடும் நாடிகளில் இறைச்சிகளைக் கொட்டுதல் , பாத்திரங்கள் கத்திகளைக் கழுவுதல் , சோப்பு போட்டு துணிகளை துவைத்தல், சாயக்கழிவுநீர்களைக் கொட்டுதல் என்று அடுக்கடுக்காய் சொல்லிக்கொண்டே போகலாம், மாநரகங்களில் மேம்பாலங்களில் ஏற்பட இருக்கும் விபத்துக்களையும் ஐயா கவனித்து தினமலரில் பதிவு செய்யவனேயும், சரியான பராமரிப்பு இல்லை, எல்லா மேம்பாலங்களிலும் மரங்கள் பெரிய அளவில் வளர்ந்து கொண்டு வருகின்றன, கனரக வாகனங்கள் செல்லும்போது இரயில் தண்டவாளத்தில் ஏற்படும் அதிர்வுகளை இந்த மேம்பாலத்தில் உணரலாம், ஒவ்வொரு இணைப்பிலும் அந்த அளவுக்கு தடைகள் இருக்கின்றன, கண்டிப்பக விரிசல் ஏற்பட்டு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டவுடன் எல்லா அதிகாரிகளும் வருவார்கள். செய்தித்தாள்களை படித்தவண்ணம் பவனி வரும் அதிகாரிகள் வெளியில் நடமாடுவது மக்கள் அவர்களது அவளை நிலை, அவர்கள் சார்ந்த இடங்களில் இது போன்ற அவலநிலைக்கு இவர்கள் உடனடியாக அந்த துறைக்கு புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பது எதனால் ? அதற்க்கேனே தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட அவர்கள் கடமையை செவ்வனே செய்வது இல்லை , , சொல்லி வைத்தாற்போன்று எல்லா இடங்களிலும் ஒன்று சேர்ந்து இதேபோன்று நடைபெறுவது எதிர்கால சந்ததியினருக்கு எதுவுமே இல்லாமல் போகப்போகிறது வருத்தம் அளிக்கிறது, இதே போன்று புனித தலங்களுக்கு சென்று அங்கு நடைபெற்ற உண்மை சம்பவங்களையும் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம், திருக்கடையூரில் அபிராமிபட்டர் மன்னர் முன்னால் எங்கு பாடினார் என்று வினவியபோது அங்குள்ளவர்கள் எங்குமே அதுபோன்று நடைபெற்றதாக தகவல் இல்லை பணியாளர்கள் என்று கூறுகிறார்கள், தட்டு ஏந்தி பிழைப்பு நடத்தும் பூசாரிகள் மட்டும் இதுபோன்ற ஒரு அம்மன் நேரில் கட்சி கொடுத்த தலம் என்று கூறுகிறார்கள் . புனித தளங்களின் சிறப்புகளை அரசு அந்த அந்த இடங்களையும் அடையாளமிட்டு உலகுக்கு கட்டவேண்டியது கடமை, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X