9 மனைவிகள்: தாம்பத்யத்துக்கு தனி அட்டவணை: பிரேசிலில் ‛‛மன்மத'' கணவன்

Updated : ஏப் 28, 2022 | Added : ஏப் 28, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
பிரேசிலியா: அவனவன் ஒரு பொண்டாட்டியை வைத்துக்கொண்டு, தட்டுத்தடுமாறி, திக்கித்திணறி, சிக்கி சின்னாபின்னமாக்கி நிற்கும் நிலையில், பிரேசிலில் ஒரு ‛மன்மதன்'' 9 மனைவிகளை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து, அனைவருடனும் தாம்பத்யத்தில் ஈடுபட ‛தனி அட்டவணை' போட்டு குடும்பம் நடத்துவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.இப்போ உள்ள காலத்தில் திருமணத்திற்கு பெண்
Man, Nine Wives, Sex Timetable, Sex Roster, Happy, 9 மனைவிகள், செக்ஸ், தாம்பத்யம், அட்டவணை, கணவன், பிரேசில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பிரேசிலியா: அவனவன் ஒரு பொண்டாட்டியை வைத்துக்கொண்டு, தட்டுத்தடுமாறி, திக்கித்திணறி, சிக்கி சின்னாபின்னமாக்கி நிற்கும் நிலையில், பிரேசிலில் ஒரு ‛மன்மதன்'' 9 மனைவிகளை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து, அனைவருடனும் தாம்பத்யத்தில் ஈடுபட ‛தனி அட்டவணை' போட்டு குடும்பம் நடத்துவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்போ உள்ள காலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது. அதிலும் 90ஸ் கிட்ஸ்களின் நிலையோ பரிதாபமாக இருக்குகிறது. அப்படி இருக்கும் சூழலில் பிரேசிலை சேர்ந்த ஒருவர் 9 மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டு அனைவருடனும் நேரத்தை பகிர்ந்துக்கொள்ள, தாம்பத்யத்தில் ஈடுபட என தனியாக ‛தாம்பத்ய அட்டவணை' போட்டு குடும்பம் நடத்தியுள்ளார்.

பிரேசில் நாட்டை சேர்ந்த ஆர்தர் என்னும் நபர் 9 மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். ஆனால், அனைவரிடமும் உரிய நேரத்தை நேரத்தை செலவிட முடியவில்லை எனவும் வருந்துகிறார். இதற்காக அவர் பல திட்டங்களை வகுத்தாலும் திருப்தியடைய முடியவில்லை எனக்கூறியுள்ள அவர், இதற்காக ‛செக்ஸ் அட்டவணை' ஒன்றை வகுத்துள்ளார். 9 மனைவிகளுடனும் சரிசமமாக தாம்பத்யத்தில் ஈடுபடுவதற்காக இந்த அட்டவணையை உருவாக்கி, அதன்படி தாம்பத்யத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.


latest tamil news


ஆனாலும், அந்த முயற்சியிலும் திருப்தி இல்லை என்கிறார் ஆர்தர். அட்டவணைப்படி மனைவிகளை காதலிப்பது கஷ்டமாக இருந்ததாகவும், அட்டவணைப்படி தாம்பத்தியத்தில் ஈடுபடும் பட்சத்தில் பாலியல் இன்பத்திற்காக அல்லாமல் அட்டவணையில் இருப்பதற்காகவே தாம்பத்தியம் கொண்ட நாட்களும் உண்டு எனவும் கூறியுள்ளார்.
இதில் 9 மனைவிகளிடமும் இருக்கும் முக்கிய பிரச்னையாக ஆர்தர் சொல்வது, மனைவிகளுக்கு கொடுக்கும் கிப்ட்களில் யாருடையது விலை உயர்ந்தது என்பதில் தான் போட்டி, பொறாமை இருக்கும் எனக் கூறியுள்ளார்.

9 மனைவிகளில் ஒருவர், ஆர்தர் தன்னுடன் மட்டுமே வாழ வேண்டும் என கட்டுப்பாடு போட்டுள்ளார். இதில் உடன்படாததால் ஒரு மனைவி மட்டும் விவாகரத்து பெற்றுள்ளார். இறுதியில் அட்டவணையை தன்னால் பின்பற்ற முடியவில்லை எனக்கூறியுள்ள ஆர்தர், அட்டவணையுடன் கூடிய காதல் ஒத்து வராது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
29-ஏப்-202209:30:20 IST Report Abuse
Sampath Kumar ஏல்லாம் நாம நாட்டில் இருந்து போனதுதான்
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
29-ஏப்-202204:31:39 IST Report Abuse
N Annamalai தமிழ் டிவி சீரியல் ஒன்றுக்கு ஒரு புதிய கதை கரு கிடைத்து விட்டது .
Rate this:
Cancel
Rahul -  ( Posted via: Dinamalar Android App )
28-ஏப்-202222:50:55 IST Report Abuse
Rahul பெரரியார் இருந்திருந்தால் புளகாங்கிதம் அடைந்திருப்பார்.அந்த 9 மனைவிகளும் வேறு ஒரு அட்டவணை வைத்திருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X