வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: எரிபொருள் மீதான வரியில் 68 சதவீதத்தை மத்திய அரசு எடுத்து கொண்டாலும், பிரதமர் தனது பொறுப்பை தட்டி கழிக்கிறார் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கை: எரிபொருள் விலை உயர்வு, நிலக்கரி, ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு மாநில அரசுகள் காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

எரிபொருள் மீதான வரியில் 68 சதவீதத்தை மத்திய அரசே எடுத்து கொள்கிறது. ஆனால், இன்னும் பிரதமர் தனது பொறுப்பில் இருந்து விலகுகிறார். அவரது கூட்டாட்சியில் இருப்பது ஒத்துழைப்பு அல்ல. கட்டாயம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.