தமிழகத்தில் காவியே பெரியது, வலியது: தமிழிசை ‛‛தடாலடி''

Updated : ஏப் 29, 2022 | Added : ஏப் 28, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
பேரூர்: காவி ஆன்மிகத்தை குறிப்பதாகவும், எனவே தான் தமிழகத்தில் காவி பெரியதாகவும், வலிமையாகவும் உள்ளதாகவும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி மற்றும் தேசிய சிந்தனைக்கழகம் (அகில பாரத பிரக்ஞா பிரவக்கின் தமிழக கிளை) இணைந்து நடத்தும் முப்பெரும் விழா நடைபெற்றது.
Tamilisai Soundararajan, Saffron, Tamilnadu, தமிழகம், தமிழ்நாடு, காவி, பெரியது, வலியது, கவர்னர், தமிழிசை சவுந்தரராஜன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பேரூர்: காவி ஆன்மிகத்தை குறிப்பதாகவும், எனவே தான் தமிழகத்தில் காவி பெரியதாகவும், வலிமையாகவும் உள்ளதாகவும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை பேரூர் பகுதியில் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி மற்றும் தேசிய சிந்தனைக்கழகம் (அகில பாரத பிரக்ஞா பிரவக்கின் தமிழக கிளை) இணைந்து நடத்தும் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்று பேசியதாவது: பெண்களின் வளர்ச்சியை வைத்து தான் நாட்டின் வளர்ச்சியை குறிப்பிட முடியும் என சொன்னால், இங்கு ஆண்களுக்கு சமமாக பெண்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 75ம் ஆண்டு சுந்தந்திர தினத்தை ஓராண்டாக கொண்டாட உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி.

தற்போதுள்ள இளைஞர்களுக்கு சுதந்திரம் குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக பிரதமர் இவ்வாறு அறிவித்துள்ளார். சுதந்திரத்திற்காக பல சுதந்திர வீரர்களை கண்டது இந்த தமிழகம். ஆன்மிகத்தை விடுத்து தமிழ் வளர்ச்சி கிடையாது. ஆன்மிகம் தான் தமிழை வளர்த்தது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. தமிழால் கோவில் கதவுகள் திறந்ததையும் தமிழால் கோவில் கதவுகள் மூடியதையும் நாம் பார்த்துள்ளோம். தமிழால் அனைத்தும் முடியும் என்பதை உணர்த்தியது மடங்கள். ஆன்மிகம் இல்லாமல் தமிழ் கிடையாது. தமிழ் இல்லாமல் ஆன்மிகம் கிடையாது என்பதை உணர்த்தியது மடங்கள்தான்.

கோவை, பேரூரில் உள்ள தமிழ்கல்லூரியில், தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள் விழா, 75வது சுதந்திரதின விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பேசினார். ஆன்மிகத்தை விடுத்து தமிழ் வளர்ச்சி கிடையாது என்றார் #tamilisai #dinamalar #perurAdheenam #kovai


latest tamil news


என்னை பற்றி யார் என்ன சொன்னாலும், என்ன எழுதினாலும் நான் துணிச்சலோடு இருக்கிறேன். அதற்கு காரணம் நான் மக்கள் சேவை, தமிழ் சேவை, ஆன்மிக சேவை செய்து வருவதான். கருப்பை (திராவிடத்தை) மட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தை அறிய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. காவி ஆன்மிகத்தை குறிக்கிறது. ஆகவே தான் தமிழகத்தில் காவி பெரியதாகவும், வலிமையாக உள்ளது. நான் தேசிய கொடியில் உள்ள காவியையும், அடிகளார்கள் அணிந்திருக்கும் காவியையும் தான் கூறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
28-ஏப்-202222:15:16 IST Report Abuse
sankar டமில் மியூசிக் சாங் இஸ் ஸ்வீட்.. ஆனால் யாரும் சட்டை செய்ய மாட்டார்கள்.
Rate this:
Cancel
Visu - chennai,இந்தியா
28-ஏப்-202221:30:22 IST Report Abuse
Visu ஹஜ் பயணத்திற்கு நிதி தரும் அரசாங்கம் காசி யாத்திரைக்கு தருவதில்லையே அத சொல்ரீங்களா
Rate this:
Cancel
RAMAKRISHAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
28-ஏப்-202220:02:20 IST Report Abuse
RAMAKRISHAN NATESAN     காவிகள் என்ன செய்வார்கள் :::::::நஷ்டத்தை நாட்டு மக்கள் தலையில் எழுதி விட்டு லாபத்தை கார்பொரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கிறது. பிறகு தேர்தல் நிதி பாத்திரங்கள் மூலம் அந்தத்தொகை கார்பொரேட் முதலாளியிடமிருந்து பிஜேபிக்கு நன்கொடையாக வந்து சேர்கிறது.
Rate this:
Venkata Krishnan - Toronto ,கனடா
29-ஏப்-202202:38:15 IST Report Abuse
Venkata Krishnanஆம். இவர்தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X