மதுரையில் ராமர் ரத யாத்திரை நடத்தியவர்கள் மீது பதிவான வழக்கு ரத்து

Added : ஏப் 28, 2022 | |
Advertisement
மதுரை-மதுரையில் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் நடந்த ரத யாத்திரையின் போது, ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., ஹிந்து முன்னணியை சேர்ந்தவர்கள் மீது பதிவான வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிதி சேகரிப்பதற்காக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் மதுரையில், 2021 பிப்ரவரியில் ரத யாத்திரை

மதுரை-மதுரையில் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் நடந்த ரத யாத்திரையின் போது, ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., ஹிந்து முன்னணியை சேர்ந்தவர்கள் மீது பதிவான வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.


அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிதி சேகரிப்பதற்காக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் மதுரையில், 2021 பிப்ரவரியில் ரத யாத்திரை நடந்தது.போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக, 52 பேர் மீது கரிமேடு போலீசார் வழக்குப் பதிந்தனர்.அதை எதிர்த்து அவர்கள், 'ஆளுங்கட்சியை திருப்திப்படுத்தவே எங்களுக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டது.



'போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தவில்லை. வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தனர்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன் நேற்று அளித்த தீர்ப்பில், ''புகார்தாரரே விசாரணை அதிகாரியாக உள்ளார். இது ஏற்புடையதல்ல. மனுதாரர்கள் மட்டுமன்றி இதர அனைத்து எதிரிகள் மீதும் பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது,'' என உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X