பெட்ரோல் வரி சர்ச்சை: மத்திய அரசு பதிலடி

Updated : ஏப் 29, 2022 | Added : ஏப் 29, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி : பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மறுத்துள்ளது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்திருந்தார். இதை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் விமர்சித்துள்ள நிலையில், மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. ஆலோசனைகொரோனா பரவல் தொடர்பாக மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மறுத்துள்ளது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்திருந்தார். இதை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் விமர்சித்துள்ள நிலையில், மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.latest tamil news
ஆலோசனை


கொரோனா பரவல் தொடர்பாக மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'பெட்ரோல், டீசல் மீதான வரியை, மத்திய அரசு கடந்த நவ.,ல் குறைத்தது. கோரிக்கை வைத்தும் தமிழகம், தெலுங்கானா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள், தங்களுடைய வரியை குறைக்கவில்லை. இது அநீதி' என, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.பிரதமரின் இந்த கருத்துக்கு, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளதாவது:எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், வெளிநாட்டு மது வகைகளுக்கான வரியைக் குறைப்பதைவிட, பெட்ரோலுக்கான வரியை குறைத்தால், அவற்றின் விலை குறையும்.சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ள மஹாராஷ்டிராவில், ௧ லிட்டர் பெட்ரோலுக்கு, மாநில அரசு, 32.15 ரூபாய் வரியாக வசூலிக்கிறது.


latest tamil news
எதிர்ப்புகாங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில், லிட்டருக்கு, 29.10 ரூபாய் வரியாக வசூலிக்கப் படுகிறது. அதே நேரத்தில் பா.ஜ., ஆளும் உத்தரகண்டில், 14.51 ரூபாயும், உத்தர பிரதேசத்தில், 16.50 ரூபாயும் வரியாக வசூலிக்கப்படுகிறது.பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, போராட்டங்கள் நடத்துவது போன்றவற்றால், உண்மை நிலவரத்தை மறைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V GOPALAN - chennai,இந்தியா
29-ஏப்-202215:04:51 IST Report Abuse
V GOPALAN Dinamalar should publish State wise Central and State portion every day so that Tamilnadu People will know which are the state has reduced.
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
29-ஏப்-202211:44:00 IST Report Abuse
Rajarajan இந்த வரி மற்றும் விலைவாசி விஷயத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் கபட நாடகத்தை உடனே நிறுத்த வேண்டும். அரசியல்வாதிகள் எதைசொன்னாலும் நம்புவதற்கு, அனுதாபிகள் மற்றும் அல்லக்கைகள் தயாராக இருக்கலாம். ஆனால், அட்மினிஸ்ட்ரேட்டர் என்கிற நிர்வாகிகள் நம்ப தயாராக இல்லை. அதற்கான காரணங்கள் இதோ. வரி வருமானம் மூலம் தான், மத்திய மாநில அரசுகள் இயங்குகின்றன. இதை தான் பட்ஜெட் முறையிலும், பின்னர் வரி விகித மாற்றம் மூலமும், விடாமல் வருமானத்தை பெருக்குகின்றன. ஆனால் அவை எங்கே செல்கின்றன ?? உட்கட்டமைப்பு, மானியம் போன்ற அவசியமானவை தவிர, விழலுக்கு செல்கின்றன. எப்படி?? இலவசம் மற்றும் நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களுக்கு சம்பளம் மற்றும் சலுகையாக செலவழிகின்றன. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை நடத்தவேண்டியது ஏன்? மேலும், அவசிய நிறுவனங்களில் கூட, அதீத ஊழியர் மற்றும் தேவையற்ற செலவினங்கள் ஏன்? இலவசத்தினால் வோட்டு பெறவும், நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இழுத்துமூட தெரியாமலும், தேவையற்ற ஊழியர்களை வெளியேற்ற தெரியாததும் தான் காரணம். மேலும், இந்த நிர்வாக சீர்திருத்தத்தை மேற்கொண்டால், அந்த ஊழியரின் குடும்ப ஓட்டுக்கள் கிடைக்காதோ என்ற பயம். ஆக, சுயநலம், நிர்வாக சீர்கேடு, அல்லது நிர்வாக சீரமைப்பு செய்ய தெரியாதது, யாரோ பொதுமக்கள் எப்படிப்போனால் நமக்கென்ன என்ற எண்ணம், நமக்கு பதவி மற்றும் சம்பாத்தியம் உட்பட, நமது குடும்ப நலன் தான் முக்கியம் என்ற எண்ணம் தான் காரணம். இதனால் தான், அரசியலுக்கு வர வேண்டும் என பலபேர் துடிப்பதே. அனால், நிர்வாக அறிவு என்பது, சுத்த பூஜ்யம் தான். மேலும், அது தேவை இல்லை என நினைக்கின்றனர். அதனால் தான், இந்த ஸ்ரீலங்கா நிலை நமக்கும் வரும்போல் உள்ளது. இதைவிடுத்து, இந்நாள் ஆட்சியர் அந்நாள் ஆட்சியரை குற்றம் சொல்வது, அவர்கள் இவர்களை குற்றம் சொல்வதும், பொதுமக்களை மூளை மழுங்கச்செய்து, தாங்கள் எப்போதும் ஆட்சியில் இருக்கவேண்டும் என்ற கண்கட்டு வித்தை தான். தொலைக்காட்சியில் விவாதங்கள் செய்வதும், பேட்டிகள் கொடுப்பதும் வெட்டி அரசியல் தான். நான் மேலே குறிப்பிட்ட கேள்விகளை, பொதுமக்கள் எப்போது உணர்ந்து, ஆட்சியாளர்களிடம் வெள்ளை அறிக்கை கேட்கிறார்களோ, அப்போது தான் விடிவு. தலைக்கு மேல் வெள்ளம். இனி ஜானோ அல்லது முழமோ விதி விட்ட வழி.
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
29-ஏப்-202210:09:42 IST Report Abuse
Vivekanandan Mahalingam மதுவை பற்றி சொன்னால் திராவிட அரசுக்கு பற்றி எரியும் - ஏனென்றால் அதை வைத்துதான் அரசாங்கம் , அதை வைத்துதான் குடும்பம், அதை வைத்துதான் கட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X