வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் 39-வது மாநாடு இன்று (ஏப். 29) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்களின் ஒருங்கிணைந்த மாநாட்டை, டில்லி விஞ்ஞான் பவனில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
![]()
|
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில், நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளை முன்னுரிமை அடிப்படையில் இணையம் வழியாக இணைப்பது, மாவட்ட நீதிமன்றங்களுக்கு தேவையான மனித வளம், பணியாளர் கொள்கை, நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு, திறன் வளர்ப்பு, நீதிசார் சீர்திருத்தங்கள், ஐகோர்ட்டுகளுக்கான நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் 38-வது மாநாடு நடந்தது. பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை. இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement