தஞ்சையில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்: 4 பேரிடம் விசாரணை

Added : ஏப் 29, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
தஞ்சாவூர்: - தஞ்சாவூர் அருகே உள்ள தோழகிரிப்பட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண் பிளஸ்-2 முடித்துவிட்டு மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடிந்து கடையில் இருந்து தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடத்தி சென்று கொண்டிருந்தார். அப்போது மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கொடியரசன் என்ற வாலிபர் இளம் பெண்ணை மறித்து பேசினார். ஏற்கனவே அறிமுகமானார் என்பதால் டூவீலரில்,
தஞ்சையில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்: 4 பேரிடம் விசாரணை

தஞ்சாவூர்: - தஞ்சாவூர் அருகே உள்ள தோழகிரிப்பட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண் பிளஸ்-2 முடித்துவிட்டு மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடிந்து கடையில் இருந்து தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடத்தி சென்று கொண்டிருந்தார். அப்போது மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கொடியரசன் என்ற வாலிபர் இளம் பெண்ணை மறித்து பேசினார். ஏற்கனவே அறிமுகமானார் என்பதால் டூவீலரில், வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் என கூறியுள்ளார். இதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததார்.

இதனால் அவரது மொபைலை பறித்துக்கொண்டு மிரட்டினார். இதனால் பயந்து போன இளம்பெண் வேறு வழியின்றி டூவீலரில் ஏறியுள்ளார்.பின்னர் இளம் பெண்ணின் வீட்டுக்கு செல்லும் வழியில் மேட்டுப் பட்டியை தாண்டியதும் கொடியரசன் இளம்பெண்ணை காட்டுப்பகுதிக்கு கடத்திச்சென்றார். அங்கு கொடியரசனின் நண்பர்களான சுகுமார், தமிழரசன், கண்ணன் ஆகிய 3 பேர் இருந்தனர் இதனால் அஞ்சி நடுங்கிய இளம் பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால் கொடியரசனும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து இளம் பெண்ணை பிடித்துக் கொண்டு அவரிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டனர்.

அங்கிருந்து ஓட முயன்றால் கொன்று போட்டு விடுவோம் என்று மிரட்டல் விடுத்த 4 பேரும் இளம் பெண்ணை கூட்டு பாலியலில் ஈடுபட்டதால் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் இளம்பெண் தவித்தார். நீண்டநேரம் கழித்து இளம்பெண்ணிடம் இப்போது வீட்டுக்கு போ... யாரிடமும் சொன்னால் நடப்பதே வேறு என்று மீண்டும் 4 பேரும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து முந்திரி தோப்பில் இருந்து நடந்தே வீட்டுக்கு வந்த இளம் பெண் இதுபற்றி தனது உறவினர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரில் பின்னர் வல்லம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொடியரசன், சுகுமார், தமிழரசன், கண்ணன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஏப்-202220:04:12 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இதெல்லாம் உ பி & பீகாரில்தான் நடக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்த டுமீல் கூட்டம் வெட்கி தலை குனியட்டும் .........
Rate this:
Cancel
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
29-ஏப்-202219:42:16 IST Report Abuse
T.Senthilsigamani இதற்க்கு கூட மனுதர்மநீதி ,சனாதன தர்மம் காரணம் என குருமா கூட்டங்கள் சொல்லி பழியை திராவிட மாடல் ஆட்சிக்கு எதிரான ஆரிய சதி என திசை திருப்ப கூடாது .உத்திர பிரதேசத்தில் பெண் கூட்டு பலாத்காரம் என்றால் மெழுகுவர்த்தி ஏற்றி கண்டன ஊர்வலங்கள் நடத்தும் பழமொழி தங்கை இதற்க்கு என்ன பதில் சொல்வார் என பார்ப்போம்
Rate this:
Cancel
sadasivan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஏப்-202216:52:33 IST Report Abuse
sadasivan Criminals are more happy with Stalin administration
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X