வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: ஹிந்தி மொழியை விரும்பாதவர்கள் வெளிநாட்டினராக கருதப்படுவார்கள். ஹிந்தி பேச விரும்பாதவர்கள் வெளிநாட்டிற்கு செல்லலாம் என உ.பி., அமைச்சர் சஞ்சய் நிஷாத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்தி மொழி தொடர்பாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் கிச்சா சுதீப் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. பின்னர், இருவரும் நட்புக்கரம் காட்டி உரையாடலை முடித்து கொண்டனர்.
இது தொடர்பாக உ.பி., மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அளித்த பதில்: இந்தியாவில் வசிக்க விரும்புபவர்கள் ஹிந்தி மொழியை விரும்ப வேண்டும். ஹிந்தி மொழியை விரும்பாதவர்கள், வெளிநாட்டினராக அல்லது வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பு உள்ளவர்களாக கருதப்படுவார்கள். பிராந்திய மொழிகளை நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், நமது நாடு ஒரே நாடு. நமது அரசியல்சாசனம், இந்தியாவை, 'ஹிந்துஸ்தான்' என கூறுகிறது. இதற்கு, ஹிந்தி பேசுபவர்கள் வாழ்வதற்கான இடம் என அர்த்தம். ஹிந்தி பேசாதவர்கள் வாழ்வதற்கு ஹிந்துஸ்தானில் இடமில்லை. அவர்கள் வேறு நாட்டிற்கு செல்லலாம். இவ்வாறு சஞ்சய் நிஷாத் கூறினார். அமைச்சரின் இந்த பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE