பாதிரியார் அபகரித்த நிலத்தை மீட்க முட்டி போட்டு முதல்வர் ஆபீசில் மனு

Updated : ஏப் 30, 2022 | Added : ஏப் 30, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
சென்னை : கிறிஸ்தவ பாதிரியார் அபகரித்த நிலத்தை மீட்டுத் தர வலியுறுத்தி, நிலத்தின் உரிமையாளர்கள், தலைமைச் செயலகத்தில், நேற்று முட்டி போட்டபடி சென்று, முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்தனர். சென்னை, சேலையூரை சேர்ந்தவர் கோதண்டராமன். ஓட்டேரி, ஸ்டான்ஸ் ரோட்டில் இருந்த, தனக்கு சொந்தமான 8,063 சதுர அடி நிலத்தை, தன் மகன்கள் சரவணபெருமாள், தனஞ்செயன், தனசேகர், தசரதன்

சென்னை : கிறிஸ்தவ பாதிரியார் அபகரித்த நிலத்தை மீட்டுத் தர வலியுறுத்தி, நிலத்தின் உரிமையாளர்கள், தலைமைச் செயலகத்தில், நேற்று முட்டி போட்டபடி சென்று, முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்தனர்.latest tamil news


சென்னை, சேலையூரை சேர்ந்தவர் கோதண்டராமன். ஓட்டேரி, ஸ்டான்ஸ் ரோட்டில் இருந்த, தனக்கு சொந்தமான 8,063 சதுர அடி நிலத்தை, தன் மகன்கள் சரவணபெருமாள், தனஞ்செயன், தனசேகர், தசரதன் ஆகியோருக்கு, சமமாக பிரித்து கொடுத்தார்.அவர்களிடம் இருந்து, சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜான் வெங்கடேசன் என்பவர், 1980ம் ஆண்டு வாடகைக்கு பெற்று, ஜெபக்கூடம் அமைத்தார். அதன்பின், மொத்த இடத்தையும் அபகரித்து கொண்டதாகக் கூறப்படுகிறது.


latest tamil news
நிலத்தின் தற்போதைய மதிப்பு, 12 கோடி ரூபாய்.சரவணபெருமாள் மற்றும் அவரது சகோதரர்கள் குடும்பத்தினர், தங்கள் நிலத்தை பாதிரியாரிடம் இருந்து மீட்டுதரக் கோரி, சென்னை போலீஸ் கமிஷனர், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

தலைமைச் செயலர், உள்துறை செயலர், முதல்வர் சிறப்பு அதிகாரி, டி.ஜி.பி., என அனைவருக்கும் மனு அனுப்பி உள்ளனர்; எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சரவண பெருமாள் குடும்பத்தை சேர்ந்த, ஐந்து பெண்கள் உட்பட எட்டு பேர், நேற்று மாலை, சென்னை தலைமைச் செயலகம் வந்தனர். அனைவரும் தலைமைச் செயலகம் உள்ளே முட்டி போட்டபடி, முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு நகர்ந்து சென்று, மனு கொடுத்தனர்.

பாதிரியாரிடமிருந்து தங்கள் நிலத்தை மீட்டுத் தர வலியுறுத்தி, மனு கொடுத்துள்ளனர். மேலும் பாதிரியாருக்கு ஆதரவாக, போலீசார் தங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதால், சென்னை போலீஸ் கமிஷனர் நேரடி பார்வையில், வேறு அதிகாரி அல்லது சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க வேண்டும் என்றும், மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஏப்-202212:57:39 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் கொஞ்சம் பார்க்கும்படி இருக்குற பெண்கள் பாதிரியாரை தனிமையில் சந்திக்காதீங்க ...... அவ்வளவு ஏன், ஆண்களும் கூட சாக்கிரதையா இருங்க ......
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
30-ஏப்-202211:45:33 IST Report Abuse
Anand அதான் ஏற்கனவே திராவிட மாடல் என சொல்லியாச்சு, பிறகென்ன, பிச்சையெடுத்தவர்களிடமே பிச்சை போட்டவர்களை பற்றி புகார் கொடுக்க என்ன தைரியம்.....
Rate this:
Cancel
30-ஏப்-202211:44:02 IST Report Abuse
kulandai kannan வீட்டை வாடகை விடுவதற்குமுன் இதையெல்லாம் ஆராய வேண்டாமா? வாடகை மட்டுமே பிரதானம் என்று துக்கிரிகளுக்கு வாடகை விட்டால் இதுதான் நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X