கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கு பரிந்துரை| Dinamalar

'கோவோவாக்ஸ்' தடுப்பூசிக்கு பரிந்துரை

Updated : ஏப் 30, 2022 | Added : ஏப் 30, 2022 | கருத்துகள் (1) | |
புதுடில்லி : நாட்டில், 12 - 17 வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளின் பட்டியலில், 'கோவோவாக்ஸ்' தடுப்பூசியை சேர்க்க, தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்து உள்ளது. கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை தயாரித்த, 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனம், கோவோவாக்ஸ் என்ற தடுப்பூசியை தயாரித்தது.இதை சில நிபந்தனைகளுடன் செலுத்த, இந்திய மருந்துகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : நாட்டில், 12 - 17 வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளின் பட்டியலில், 'கோவோவாக்ஸ்' தடுப்பூசியை சேர்க்க, தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்து உள்ளது.



latest tamil news



கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை தயாரித்த, 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனம், கோவோவாக்ஸ் என்ற தடுப்பூசியை தயாரித்தது.இதை சில நிபந்தனைகளுடன் செலுத்த, இந்திய மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்தது.



latest tamil news


இதையடுத்து, 12 - 17 வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளின் பட்டியலில், கோவோவாக்ஸ் தடுப்பூசியை சேர்க்கக்கோரி, மத்திய சுகாதாரத் துறையிடம், சீரம் நிறுவனம் முறையிட்டது.



இந்நிலையில், நேற்று ஆலோசனை நடத்திய, என்.டி.ஏ.ஜி.ஐ., எனப்படும், தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளின் பட்டியலில், கோவோவாக்ஸ் தடுப்பூசியை இணைக்க பரிந்துரைத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X