வாவ்...தமிழ்நாடு புகைப்பட கண்காட்சி

Updated : ஏப் 30, 2022 | Added : ஏப் 30, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட வாவ் தமிழ்நாடு புகைப்பட போட்டியில் தேர்ந்து எடுக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட படங்கள் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது,இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.கடந்த ஆறு மாதகாலமாக புகைப்படக்கலைஞர்கள் மத்தியில் பேசு பொருளாக இந்த புகைப்படப் போட்டிதான் இருந்தது காரணம்
வாவ்...தமிழ்நாடு புகைப்பட கண்காட்சி


latest tamil news


தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட வாவ் தமிழ்நாடு புகைப்பட போட்டியில் தேர்ந்து எடுக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட படங்கள் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது,இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.


latest tamil news


Advertisement

கடந்த ஆறு மாதகாலமாக புகைப்படக்கலைஞர்கள் மத்தியில் பேசு பொருளாக இந்த புகைப்படப் போட்டிதான் இருந்தது காரணம் முதல் பரிசு மூன்று லட்ட ரூபாய் மதிப்புள்ள கார் என்பதுதான்.இந்தப் பரிசை நேற்று நடந்த நிகழ்வில் திருநெல்வேலியைச் சார்ந்த ஜெனித் என்பவர் பெற்றார்.


latest tamil news


இது தவிர சிறப்பு பரிசுகளாக இருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது மற்றும் பதிமூன்று பிரிவுகளில் மூன்று, மூன்று பேர்களாக தேர்வு செய்யப்பட்டு அனைவருக்கும் முறையே முதல் இரண்டாவது மூன்றாவது பரிசாக 25 ஆயிரம் 5 ஆயிரம் 3 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


latest tamil news


பரிசளிப்பு விழாவில் நடுவர்களாக இருந்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்,இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர்க கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.


latest tamil news


நடந்து முடிந்த போட்டியில் நானும் பங்கேற்பாளராக கலந்து கொண்டு மூன்றாவது பரிசு பெற்றுள்ளேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


latest tamil news



-எல்.முருகராஜ்



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
01-மே-202216:48:57 IST Report Abuse
Krishnamurthy Venkatesan அற்புதமான புகை படங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X