அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி துரியோதனனா? : ஜெயலலிதா

Updated : ஆக 28, 2011 | Added : ஆக 26, 2011 | கருத்துகள் (86)
Share
Advertisement
Jayalalitha, Karunanidhi, ஜெயலலிதா, கருணாநிதி,

சென்னை: ""துரியோதனனுடன் கருணாநிதியை ஒப்பிடுவது சரியல்ல'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டசபையில் நடந்த விவாதம்:

ராஜேந்திரன்- அ.தி.மு.க.,: கலியுக துரியோதனன் முன்னாள் முதல்வர் கருணாநிதி.


முதல்வர் ஜெயலலிதா: துரியோதனனுடன் கருணாநிதியை ஒப்பிட்டு பேசுவது சரியல்ல. துரியோதனன் தீயவனாக இருந்தாலும், சாகும் வரை முடிசூடா மன்னனாக வாழ்ந்தவன். முன்னாள் முதல்வர் கருணாநிதி, முடி இழந்து, மக்களால் ஓட ஓட விரட்டப்பட்டவர்.


ராஜேந்திரன்: குறிஞ்சிப்பாடி தொகுதியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக, ஆட்சி முடியும் நேரத்தில், அங்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்பதாக அடிக்கல் நாட்டினர். தேர்தல் சமயத்தில், ஓட்டு போடாவிட்டால் கல்லூரி கட்டப்படாது என்று பிரசாரம் செய்தனர். முதல்வர் ஜெயலலிதா, மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி அமைக்கும் போது, இங்கு மருத்துவக் கல்லூரியும், கூடவே ஒரு இன்ஜினியரிங் கல்லூரியும் வழங்குவார் என்று, மக்களிடம் உறுதியளித்துள்ளேன்.


தாமோதரன் - அ.தி.மு.க.,: விவசாயிகளின் எதிரியாக செயல்படும் திருமூர்த்தி பாசன குழுவை கலைக்க வேண்டும். அதன் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன பகுதிகளில், கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சியில் விடுபட்ட பகுதிகளையும் சேர்க்க வேண்டும்.


கதிரவன் - பார்வர்டு பிளாக்: கேரளா, ஆந்திராவில் காங்கிரசும், கர்நாடகாவில் பாரதிய ஜனதாவும் ஆட்சி செய்கின்றன. இவை தேசிய கட்சிகள். ஆனால், மாநில மக்களை பிரித்துப் பார்க்கின்றன. அம்மாநில அரசுகள் தமிழகத்தை எதிரியாக பார்க்கின்றன.


மைக்கேல் ராயப்பன் - தே.மு.தி.க.,: நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது போல, கடந்த ஐந்து ஆண்டுகளில், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பற்றி விசாரிக்க, தனிப் பிரிவு அமைத்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ராதாபுரம் பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள அஞ்சுகம் சிலையை அகற்ற வேண்டும்.


Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.C.MAHENDRAN - Lusaka,ஜாம்பியா
27-ஆக-201113:37:58 IST Report Abuse
T.C.MAHENDRAN துரியோதனன் கெட்டவனாக சித்தரிக்கப்பட்டாலும் இதிகாசத்தில் இடம் பிடித்தான் !!! அந்த துரியோதனனுடன் இந்த புல்லுருவியை ஒப்பிடுவதா ?.
Rate this:
Cancel
Vinayagamoorthi Rengarajan - Chennai ,இந்தியா
27-ஆக-201113:29:54 IST Report Abuse
Vinayagamoorthi Rengarajan மேடம், பழி சொல்லவதை நிறுத்திவிட்டு.. ஆக்கபூர்வமாக ஒட்டு போட்ட மக்களுக்கு நல்லது செய்திட சிந்தியுங்கள் . நல்லது செய்தால் தான் திரும்பவும் நீங்கள் ஆட்சிக்கு வரமுடியும்.. இல்லை என்றல் நீங்கள் திருபவும் கொட நட்டு என்ற காட்டுக்கு ஓட வேண்டி வரும் மிஸ் மேடம்.
Rate this:
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
27-ஆக-201113:24:45 IST Report Abuse
JAY JAY தீயவனாக இருப்பவன் ஒரு நிமிடம் கூட ஆட்சி செய்வது முறையல்ல !!! கருணாநிதியை அந்த லிஸ்டில் தான் சேர்க்க வேண்டும் !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X