அவசர காலத்தில் வெளியேறும் வசதி இல்லை: 99% மருத்துவமனைகளில் குறைபாடு

Added : மே 01, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
''தமிழகத்தில் அவசர காலத்தில் நோயாளியை வெளியேற்றும் வசதி, 99 சதவீத மருத்துவமனைகளில் குறைபாடுகளுடன் உள்ளன,'' என, உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டகுழு உறுப்பினர் ஜவஹர்லால் சண்முகம் கூறினார்.'அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், உரிய விதிகளை பின்பற்றி கட்டப்படவில்லை' என, சென்னையை சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பவர், 2015ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
அவசர காலம், வெளியேறும் வசதி, குறைபாடு, மருத்துவமனை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

''தமிழகத்தில் அவசர காலத்தில் நோயாளியை வெளியேற்றும் வசதி, 99 சதவீத மருத்துவமனைகளில் குறைபாடுகளுடன் உள்ளன,'' என, உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டகுழு உறுப்பினர் ஜவஹர்லால் சண்முகம் கூறினார்.

'அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், உரிய விதிகளை பின்பற்றி கட்டப்படவில்லை' என, சென்னையை சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பவர், 2015ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, சுபாஷ் சந்திரன் என்பவரும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், 2018ல் மருத்துவமனைகளில், சாய்வு தளம், தீத்தடுப்பு சாதனங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் தலைமையில், மனுதாரர்கள் ஜவஹர்லால் சண்முகம், சுபாஷ் சந்திரன் மற்றும் மருத்துவமனை முதல்வர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு, 6,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 2020ல் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், தற்போது தீ விபத்து ஏற்பட்ட கட்டடம் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக, அப்போதே அரசுக்கு இக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

ஜவஹர்லால் சண்முகம் கூறியதாவது:அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், தீத்தடுப்பு உபகரணங்கள் முழு அளவில் இல்லை. 99 சதவீத மருத்துவமனைகளில், ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கிறது. இவற்றை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போது தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில், மின் ஒயர்கள் தொங்கியபடி இருந்தன. மேலும் உரிய பராமரிப்பின்றி இருந்தன. மின் ஒயர்களை எலிகள் கடித்து அசம்பாவிதம் ஏற்படும் என, மருத்துவமனை நிர்வாகத்துக்கு, ஏற்கனவே எச்சரித்து இருந்தோம்.

குழு ஆலோசனைகளை சில மருத்துவமனைகள் ஏற்ற நிலையில், பெரும்பாலான மருத்துவமனைகள் இதுவரை சரி செய்யவில்லை. குறிப்பாக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைகளில், எட்டு அடுக்கு மாடிகட்டடங்கள் உள்ளன. இங்குள்ள படுக்கைகளில், 'வீல்' பொருத்தப்படவில்லை. அதனால், அவசர காலத்தில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளை வெளியேற்றுவது, அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியும்.


latest tamil newsஅதேபோல், பெரும்பாலான மருத்துவமனை கட்டடங்கள், போதிய இடைவெளி இல்லாமல் உள்ளன. இதனால், தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இவற்றை தவிர்க்க, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தீத்தடுப்பு சாதனங்கள், சாய்வு தளம், படுக்கைகளில் வீல் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


என்னென்ன வசதிகள் அவசியம்?* மருத்துவமனை கட்டடங்களில், தீயணைப்பு துறையினர் ஆலோசனை பெற்று, தீத்தடுப்பு கருவிகள் பொருத்துவதுடன், போதிய அளவில் காலி இடங்களும் அவசியம்

* ஒவ்வொரு கட்டடத்திலும் குறைந்தபட்சம் இரண்டு ஜன்னல் அமைக்க வேண்டும். அவசர காலத்தில், கட்டடத்தில் இருப்போர் வெளியேற, தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்

* மருத்துவமனை கட்டடங்களில் குறைந்தபட்சம் இரண்டு நுழைவாயில் இருக்க வேண்டும். ஊழியர்களுக்கு, தீயணைப்புத் துறை வாயிலாக, தீத்தடுப்பு பயிற்சி அளித்திருக்க வேண்டும்

* அவசர காலத்தில் பாதுகாப்பாக வெளியேற எங்கெல்லாம் வழி உள்ளது, தீத்தடுப்பு சாதனங்கள் எங்கு உள்ளன என்ற விபரங்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும்

* நோயாளிகள் சிகிச்சை பெறும் தரைத் தளத்தில் இருந்து மேல் தளம் வரை, 2.1 மீட்டர் அகலம் கொண்ட சாய்வு தளம் கட்டாயம் இருக்க வேண்டும்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - thenkaasi,இந்தியா
01-மே-202217:36:39 IST Report Abuse
vadivelu ராஜீவ் காந்தி மருத்துவமனை சட்ட மன்றத்திற்க்காக கட்டப்பட்டது, தீ பிடித்தால் தப்பிக்க முடியாத வகையிலா அத்தனை கோடி கொடுத்து கட்டினார்கள்.எப்படியோ இது மருத்துவ மனைக்கு லாயக்கில்லை என்று ஒரு சர்டிபிகடே தேவை படுற மாதிரி இருக்கே.
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
01-மே-202215:01:42 IST Report Abuse
periasamy அரசு, தனியார் மருத்துவ மனைக் கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு முன்பு தமிழ்நாடு தீயணைப்பு துறை தடையில்லா சான்றிதழ் கட்டாய படுத்த வேண்டும் அதை கட்டுப்படுத்த தீ கட்டுப்படுத்துதலில் பொறியில் படிப்பில் நிபுணர் துவம் பெற்றவைகளால் தடையில்லா சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
01-மே-202213:04:01 IST Report Abuse
Tamilan அப்படியெல்லாம் வசதியோடு காட்டினாலே அந்நியர்களைப்போல் கட்டணங்களையும் உயர்த்த நேரிடலாம். அப்போது பாமரர்களுக்கு எட்டாக்கனியாக மாறிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X