சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி: மதுரை மருத்துவ கல்லூரியில் சர்ச்சை| Dinamalar

சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி: மதுரை மருத்துவ கல்லூரியில் சர்ச்சை

Updated : மே 02, 2022 | Added : மே 01, 2022 | கருத்துகள் (79) | |
சென்னை: மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்று கொண்ட விவகாரம் தொடர்பாக டீன் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 250 பேரை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மதுரை மருத்துவ கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தியாகராஜன்,
மதுரை அரசு மருத்துவ கல்லூரி, டீன், சமஸ்கிருதம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்று கொண்ட விவகாரம் தொடர்பாக டீன் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 250 பேரை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மதுரை மருத்துவ கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தியாகராஜன், மூர்த்தி, எம்.பி., வெங்கடேசன் மற்றும் மருத்துவ கல்லூரி டீன் ரத்னவேல், பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு வாசித்தனர். இது சமஸ்கிருத மொழியில் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.


latest tamil news



இதனை தொடர்ந்து டீன் ரத்னவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்தவும் மருத்துவ கல்வி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


கூடுதல் பொறுப்பு

இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதால், தற்போது மதுரை அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வராக உள்ள தனலட்சுமி கூடுதல் பொறுப்பாக டீன் பொறுப்பையும் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X