நாட்டின் சவால்களை முப்படைகளும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும்; ராணுவ தளபதி

Updated : மே 02, 2022 | Added : மே 01, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: நாட்டு முன் உள்ள சவால்கள் மற்றும் சிக்கல்களை முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியுள்ளார்.இந்திய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே நேற்று(ஏப்.,30) பொறுப்பேற்று கொண்டார். தொடர்ந்து இன்று, டில்லி, தெற்கு பிளாக் பகுதியில் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கடற்படை தளபதி ஹரி, விமானப்படை தளபதி
Army chief, Manoj Pande, Armed Forces, united,  security challenges,

புதுடில்லி: நாட்டு முன் உள்ள சவால்கள் மற்றும் சிக்கல்களை முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியுள்ளார்.

இந்திய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே நேற்று(ஏப்.,30) பொறுப்பேற்று கொண்டார். தொடர்ந்து இன்று, டில்லி, தெற்கு பிளாக் பகுதியில் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கடற்படை தளபதி ஹரி, விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


நாட்டின் சவால்களை முப்படைகளும் இணைந்து எதிர்கொள்ளும்

latest tamil news
அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டபின்னர் மனோஜ் பாண்டே கூறியதாவது: இந்திய ராணுவத்தை வழிநடத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது மிகவும் பெருமையாகவும், கவுரவமாகவும் இருக்கிறது. அதை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். பணிவு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மதிப்புகளுக்கு இந்திய ராணுவம் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது.

தற்போதைய, சமகால மற்றும் எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தின் தயார்நிலையை உறுதி செய்வதே எனது முதல்பணி. உலகளாவிய புவிசார் அரசியல் நிலைமை வேகமாக மாறி வருகிறது. இதனால், நம்முன் பல சவால்கள் உள்ளன. விமானப்படை, கடற்படையுடன் ஒருங்கிணைந்து மற்றும் ஒத்துழைப்புடன் எந்த சூழ்நிலையையும் ராணுவம் சமாளிக்கும்.

ராணுவத்தில் சுயசார்பை எட்டுவதற்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், தற்போதைய சீர்திருத்தங்கள், மறுசீரமைப்பு மற்றும் மாற்றம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆயுத படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதே எனது நோக்கம்.முந்தைய தளபதிகள் மேற்கொண்ட நல்ல பணிகளை முன்னெடுத்து செல்வதுடன், ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களின் நலன் உறுதி செய்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
03-மே-202217:24:19 IST Report Abuse
Akash Get ready to fight if the country wants you...dont leave it to defense and relax
Rate this:
Cancel
01-மே-202214:33:59 IST Report Abuse
Gopalakrishnan S இராணுவ தளபதிகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். உங்கள் தியாகத்தின் பலனாகத்தான் நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம்.
Rate this:
Cancel
01-மே-202214:33:59 IST Report Abuse
Gopalakrishnan S இராணுவ தளபதிகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். உங்கள் தியாகத்தின் பலனாகத்தான் நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X