இசிஆர் சாலைக்கு கருணாநிதி பெயர்: நெடுஞ்சாலை துறை பவளவிழாவில் ஸ்டாலின் அறிவிப்பு

Updated : மே 01, 2022 | Added : மே 01, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
சென்னை: சென்னை-மாமல்லபுரம் இடையிலான கிழக்குகடற்கரைசாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னைகிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சிமையத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை பவளவிழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின், இசிஆர் சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார்.ஸ்டாலின் பேசியதாவது:தமிழ்நாட்டின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னை-மாமல்லபுரம் இடையிலான கிழக்குகடற்கரைசாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



latest tamil news



சென்னைகிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சிமையத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை பவளவிழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின், இசிஆர் சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார்.
ஸ்டாலின் பேசியதாவது:தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு முக்கிய பங்கு உள்ளது.மக்கள் பயன்பாட்டில் மிகவும் முக்கியமானது நெடுஞ்சாலைத் துறை. 1972ஆம் ஆண்டு கிராமங்களுக்கு இணைப்புச் சாலை அமைக்கும் திட்டம் திமுகவால் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன் பிறகு ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கிராமங்கள் அனைத்துக்கும் இணைப்புச் சாலை அமைக்கப்பட்டது. திமுக ஆட்சி காலத்தில் அதிக மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அண்ணா மேம்பாலம் நாட்டின் சிறந்த மேம்பாலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழகத்தில் ஒரே வீச்சில் 1997ஆம் ஆண்டு 302 கோடி ரூபாயில் 106 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இவை அனைத்தும் 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டது இன்றும் ஆச்சரியமாக உள்ளது.நெடுஞ்சாலைத் துறை பணியில் சுணக்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


latest tamil news


இவ்விழாவில்,முன்னதாக,நெடுஞ்சாலைத்துறையின் பவளவிழா நினைவுத்தூணை திறந்து வைத்து பவளவிழா மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
03-மே-202209:00:23 IST Report Abuse
sankar மிக பொருத்தம் சாராய நகரமான பாண்டிச்சேரிக்கு செல்லும் சாலைக்கு தமிழகத்தில் சாராயத்தை தொடங்கி வாய்த்த கருணாநிதி பெயர் வைக்காமல் வேறு பெயர் வைத்தால் தெலுங்கனை பொங்கி விடுவாள்
Rate this:
Cancel
02-மே-202211:01:15 IST Report Abuse
kulandai kannan ஆட்சி மாறும்போது, புதிய முதல்வரின் முதல் கையெழுத்து, இந்த பித்தலாட்டத்தை சரி செய்வதாகத்தான் இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
02-மே-202211:00:19 IST Report Abuse
ஆரூர் ரங் 50 ஆண்டுகளுக்கு முன் மவுண்ட் ரோடுக்கு அண்ணாசாலை எனப் பெயர் மாற்றினார்கள். ஆனால் இப்போதும் 99 சதவீதம் பேர் மவுண்ட் ரோடு😉 என்றுதானே அழைக்கிறார்கள்? பெயர் மாற்றியதால் உருப்பட்டு விட்டதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X