நத்தாநெல்லூர் கிராம திருவிழா| Dinamalar

நத்தாநெல்லூர் கிராம திருவிழா

Updated : மே 02, 2022 | Added : மே 02, 2022 | |
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பக்கம் உள்ள நத்தாநெல்லுார் கிராம தேவி ஸ்ரீ எல்லம்மன் ஆலய தெப்போற்சவ திருவிழா கடந்த 30 ந்தேதி ஊர் மக்கள் சார்பாக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.நத்தாநெல்லுார் கிராம திருவிழா 43 வருடங்களாக அதே சம்பிராதயங்களுடன் நடந்து வருகிறது.அங்குள்ள சிறு பெண் குழந்தைகளை அம்மன்களாக பாவித்து ஊர்வலமாக அழைத்து வருகின்றனர் அவர்களை பலர்latest tamil news


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பக்கம் உள்ள நத்தாநெல்லுார் கிராம தேவி ஸ்ரீ எல்லம்மன் ஆலய தெப்போற்சவ திருவிழா கடந்த 30 ந்தேதி ஊர் மக்கள் சார்பாக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.


latest tamil news


நத்தாநெல்லுார் கிராம திருவிழா 43 வருடங்களாக அதே சம்பிராதயங்களுடன் நடந்து வருகிறது.அங்குள்ள சிறு பெண் குழந்தைகளை அம்மன்களாக பாவித்து ஊர்வலமாக அழைத்து வருகின்றனர் அவர்களை பலர் வயது வித்தியாமின்றி விழுந்து வணங்குகின்றனர்.சாணி வரட்டி என்று சொல்லப்படும் எருவாட்டி மட்டுமே உபயோகித்து பொங்கல் வைக்கின்றனர்.


latest tamil news


அதே போல விரதமிருந்த இளைஞர்கள் உடம்பெங்கும் அலகு குத்தி அந்தரத்தில் வாகன உதவியுடன் பவனி வருகின்றனர் அவர்களது முழு உடம்பையும் அலகுகள்தான் தாங்கிநிற்கின்றன என்பதுதான் விசேஷம்,இப்படி பவனி வரும் இளைஞர்களிடம் குழந்தைகளை கொடுத்து ஆசீர்வாதம் பெறுகின்றனர்.


latest tamil news


இந்த கிராமத்தைச் சார்ந்த வெளியூரில் வசிக்கும் உறவுகளும் நட்புகளும் திரண்டு வந்ததை அடுத்து கிராமம் களைகட்டியது இரவு நேரம் தெப்பம் வலம் வந்த போது நடந்த வான வேடிக்கை கண்களுக்கு விருந்தாகவும் அமைந்தது.


latest tamil news


படம்,தகவல்:ரேகா விஜயசங்கர்புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X