இலங்கை பெண் அகதி வீட்டிற்குள் இரவில் புகுந்த போலீஸ்காரர்

Added : மே 03, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அகதியாக வந்து ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒரு இளம்பெண் வீட்டிற்குள் மெரைன் போலீஸ்காரர் அன்பு புகுந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.இலங்கையில் இருந்து மார்ச் 22 ல் படகில் அப்பெண்ணுடன் மூன்று குழந்தைகள், இரு பெரியவர்கள் உள்ளிட்ட 6 பேர் ராமேஸ்வரம் வந்தனர். அவர்களை கடலோர காவல்

ராமநாதபுரம் : இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அகதியாக வந்து ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒரு இளம்பெண் வீட்டிற்குள் மெரைன் போலீஸ்காரர் அன்பு புகுந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

இலங்கையில் இருந்து மார்ச் 22 ல் படகில் அப்பெண்ணுடன் மூன்று குழந்தைகள், இரு பெரியவர்கள் உள்ளிட்ட 6 பேர் ராமேஸ்வரம் வந்தனர். அவர்களை கடலோர காவல் படையினர் விசாரித்தனர். பின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர். கணவரை பிரிந்து அப்பெண் குழந்தைகளுடன் தங்கியுள்ளார்.மண்டபம் மெரைன் போலீஸ்காரர் அன்பு அப்பெண்ணிடம் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அப்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து தவறாக நடக்க முயன்றார். அவர் மறுத்ததால் அன்பு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அப்பெண் கொடுத்த புகாரின்படி அன்புவிடம் போலீசார் விசாரித்தனர்.ராமநாதபுரம் மாவட்ட மெரைன் ஏ.டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் கூறுகையில், ''புகார் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸ்காரர் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X