புடினுக்கு புற்றுநோய் சிகிச்சை?: கொஞ்ச காலம் கைமாறுது அதிகாரம்!

Updated : மே 03, 2022 | Added : மே 03, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதனால் சிறிது காலத்திற்கு அதிகாரத்தை, தனது நம்பிக்கைக்குரிய நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலர் நிகோலய் பத்ருஷேவிடம் அவர் ஒப்படைக்க உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உக்ரைன் மீது ரஷ்யா பல நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு
russia, putin, Vladimir Putin, ரஷ்யா, புடின், புதின், விளாடிமிர்புடின், விளாதிமிர்புதின், விளாடிமிர்புதின், விளாதிமிர்புடின்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதனால் சிறிது காலத்திற்கு அதிகாரத்தை, தனது நம்பிக்கைக்குரிய நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலர் நிகோலய் பத்ருஷேவிடம் அவர் ஒப்படைக்க உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா பல நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இச்சூழ்நிலையில், அந்நாட்டு அதிபர் புடின்(69) உடல்நிலை குறித்து பல்வேறு விதமான யூகங்களை வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அவரது தோற்றத்தை வைத்தும் உடல்நிலை பாதிப்பு குறித்து செய்தி வெளியாகின. வயிற்று புற்றுநோய் மற்றும் பார்கின்சன் நோய் பாதிப்பால் புடின் அவதியடைந்து வருவதாக செய்திகள் வந்தாலும் அது குறித்து உறுதியான தகவல் இல்லை.


புடினுக்கு புற்றுநோய் நண்பர் அதிபராகிறார் வாஷிங்டன் போஸ்ட் பரபரப்பு செய்தி

latest tamil newsஇந்நிலையில் அமெரிக்க ஊடகத்தில் வெளியான செய்தி: புற்றுநோயால் அவதிப்படும் புடினுக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இந்த சிகிச்சை கட்டாயம் என டாக்டர்கள் கூறிவிட்டனர். அறுவை சிகிச்சை மற்றும் அதில் இருந்து மீண்டு வர கொஞ்ச காலம் ஆகும். அந்த நேரத்தில், தற்காலிகமாக தனது அதிகாரத்தை, நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலர் நிகோலய் பத்ருஷேவிடம் ஒப்படைக்க உள்ளார். நீண்ட நாட்களுக்கு தனது அதிகாரத்தை ஒப்படைக்க புடின் விரும்பவில்லை. நாட்டின் அதிகாரம் 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் பத்ருஷேவின் கைகளில் இருக்காது. இவர் அதிபராக பதவியேற்றால், நாட்டின் பிரச்னை மேலும் அதிகரிக்கதான் செய்யும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அமெரிக்காவின் பெண்டகன் உறுதிப்படுத்தவில்லை என அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
03-மே-202220:21:42 IST Report Abuse
Fastrack Fake news கிளப்பி விடுவதில் அமேரிக்கா கில்லாடி
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
03-மே-202217:54:18 IST Report Abuse
DVRR கொஞ்ச காலம் ஆகும்???enna oru moonru naalaa maadhamaa varudamaa???purru noy aruvai enraal uyirodu thirumbi aatchi seyya nichchyamaka kuraindhathu 3 maadhamaavaathu nichchyam aagum
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
03-மே-202217:11:56 IST Report Abuse
sankaranarayanan அமெரிக்கச்செய்தி நிறுவனம் புட்டினைப்பற்றி புட்டு புட்டு வைக்கிறதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X