ஒரே நாளில் 18 ஆயிரம் கிலோ! தங்கம் விற்பனை

Updated : மே 04, 2022 | Added : மே 04, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை : அக் ஷய த்ருதியையை முன்னிட்டு, தங்கம் வாங்க நேற்று அதிகாலை முதலே மக்கள் நகைக் கடைகளில் குவிந்ததால், ஒரே நாளில் மட்டும் 18 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு, 'ஆன்லைனில்' மட்டும் விற்பனை நடந்தது; 12 ஆயிரம் கிலோ விற்பனையானது.தமிழகம் முழுதும் உள்ள, 35 ஆயிரம் நகைக் கடைகளில் தினமும் சராசரியாக, பழைய மற்றும் புதிய தங்க நகைகளின் விற்பனை, 10 ஆயிரம்
ஒரே நாள்,  18 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை

சென்னை : அக் ஷய த்ருதியையை முன்னிட்டு, தங்கம் வாங்க நேற்று அதிகாலை முதலே மக்கள் நகைக் கடைகளில் குவிந்ததால், ஒரே நாளில் மட்டும் 18 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு, 'ஆன்லைனில்' மட்டும் விற்பனை நடந்தது; 12 ஆயிரம் கிலோ விற்பனையானது.

தமிழகம் முழுதும் உள்ள, 35 ஆயிரம் நகைக் கடைகளில் தினமும் சராசரியாக, பழைய மற்றும் புதிய தங்க நகைகளின் விற்பனை, 10 ஆயிரம் கிலோவாக உள்ளது. அக் ஷய த்ருதியை தினத்தில் தங்கம் வாங்கினால், செல்வம் மேலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.


latest tamil news


ரூ9000 கோடி கடந்தது அட்சய திருதியை தங்க விற்பனை | Akshaya Tritiya Gold Sales | ₹.9000 Crores Gold Sales | Dinamalarநேற்று, அக் ஷய த்ருதியை கொண்டாடப்பட்டது. இதற்காக, முன்னணி நகைக் கடைகள் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும் கூட, கூடுதல் தள்ளுபடி, குறைந்த செய்கூலி, பரிசு பொருட்கள் என, பல்வேறு சலுகைகள் முன்கூட்டியே அறிவித்தன.
கொரோனா பாதிப்பால், இரண்டு ஆண்டுகளாக கடைகள் மூடப்பட்டு, ஆன்லைன் வாயிலாக தங்கள் வாங்கியோர், நேற்று நகை கடைகளுக்கு நேரடியாக சென்று, தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டினர். அவர்களின் வசதிக்காக, அதிகாலை முதலே நகை கடைகள் திறக்கப்பட்டன.
வாடிக்கையாளர்கள் வெயிலில் சிரமப்பட கூடாது என்பதற்காக, நகைக் கடைகளுக்கு வெளியில் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன; குடிநீர் பாட்டில், மோர், குளிர்பானங்கள், டீ, காபி போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன.

ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போரால், முந்தைய வாரங்களில், 40 ஆயிரம் ரூபாயை தாண்டிய 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை, நேற்று 38 ஆயிரத்து 368 ரூபாயாக குறைந்திருந்தது.இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு 856 ரூபாய் சரிந்துள்ளது. இது, வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இதனால், ஏற்கனவே பணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தவர்களும், நேற்று கூடுதல் பணம் செலுத்தி, ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த நகைகளை விட அதிக எடையில் தங்க நகைகளை வாங்கினர்.
நகை சேமிப்பு திட்டங்களில் மாதம்தோறும் பணம் செலுத்தி வந்தவர்களும், அவற்றை ரத்து செய்து, நேற்று நகைகளை வாங்கினர்.

இதனால், சென்னையில் தி.நகர், பிராட்வே, அண்ணா நகர், குரோம்பேட்டை, தாம்பரம் போன்ற முக்கிய வியாபார பகுதிகள் மட்டுமின்றி, மாநிலம் முழுதும் உள்ள நகை கடைகளில் கூட்டம் அலைமோதியது.இதையடுத்து, நேற்று ஒரே நாளில், 18 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, ஒரு கிலோ தங்ககம் விலை 50 லட்சம் ரூபாய். இதன்படி, நேற்று மட்டும் 9,000 கோடி ரூபாய்க்கு தங்கம் விற்பனையாகி உள்ளதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக, கடைகளில் விற்பனை நடக்கவில்லை. 'ஆன்லைன்' வழியே நடந்த விற்பனையில், 12 ஆயிரம் கிலோவுக்கு மக்கள் நகை வாங்கினர். அதற்கு முந்தைய ஆண்டு, 5,000 கிலோ விற்பனையானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
04-மே-202208:06:19 IST Report Abuse
Girija கடத்தல் தங்கம் மூலம் விற்பனை என்ற பெயரில் கருப்பு பணம் வெளுப்பாகிறது
Rate this:
Cancel
Sridharan Venkatraman - Tiruchirappalli,இந்தியா
04-மே-202208:05:48 IST Report Abuse
Sridharan Venkatraman பெட்ரோல் டீசல் விலை உயர்வைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-மே-202206:16:48 IST Report Abuse
Mani . V அக் ஷய த்ருதியை வியாபாரிகளை கோடீஸ்வரர்களாக்குகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X