நூல் விலை உயர்வால் சிக்கல்: மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த முயற்சி

Updated : மே 04, 2022 | Added : மே 04, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
திருப்பூர்: மாநில அளவிலான போராட்டமாக மாற்றும் முயற்சியாக, ஈரோடு, கரூர், சேலம் மாவட்ட ஜவுளித்துறையினருடன் பேச்சு வருவதாக, பின்னலாடை போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.பருத்தி பஞ்சுக்கு ஏற்பட்ட செயற்கை தட்டுப்பாட்டால், நுால் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. கடந்த, ஓராண்டாக நுால் விலை நிலையில்லாமல் இருப்பதால், பின்னலாடை தொழில் கடுமையாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பூர்: மாநில அளவிலான போராட்டமாக மாற்றும் முயற்சியாக, ஈரோடு, கரூர், சேலம் மாவட்ட ஜவுளித்துறையினருடன் பேச்சு வருவதாக, பின்னலாடை போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.



latest tamil news




பருத்தி பஞ்சுக்கு ஏற்பட்ட செயற்கை தட்டுப்பாட்டால், நுால் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. கடந்த, ஓராண்டாக நுால் விலை நிலையில்லாமல் இருப்பதால், பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பின்னலாடை தொழிலில், நிட்டிங், ரைசிங், காம்பாக்டிங், டையிங், பிரின்டிங், எம்பிராய்டரிங் என, 55 தொழில் அமைப்புகள் இயங்கி வருகின்றன. பனியன் தொழில் என்பது, சங்கிலி தொடர் போன்ற தொடர்பில் இருப்பதால், ஏதாவது ஓரிடத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும், ஒட்டுமொத்த தொழிலும் ஸ்தம்பிக்கும். இந்திய பருத்தி கழகம், பருத்தி பஞ்சு வர்த்தகத்தை வரன்முறை செய்யாததால், தொடர்பில்லாத நிறுவனங்களில், லட்சக்கணக்கான பேல்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, பஞ்சு விலை அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


latest tamil news




மத்திய அரசு, அசாதாராண சூழலில், பனியன் தொழிலை பாதுகாக்க, பருத்தி, நுால் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். பருத்தியை அத்யாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டுமென குரல்கொடுக்க துவங்கிவிட்டனர்.இதற்காக, பல்வேறு தொழில் அமைப்பினர் இணைந்து, வரும், 16 முதல், 21ம் தேதி வரை, தொடர் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.

பல்வேறு அமைப்பினர், பொதுமக்களின் ஆதரவை பெற்று, பொதுவேலை நிறுத்தமாக நடத்தி, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளனர்.மாவட்ட அளவிலான போராட்டமாக இல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள ஜவுளித்துறையினரை ஒருங்கிணைத்து, மாநில அளவிலான போராட்டமாக நடத்தவும் முயற்சி துவங்கிவிட்டது.

இதுகுறித்து 'டீமா' சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:
திருப்பூர் நகரின் வளர்ச்சி, பனியன் தொழிலையே நம்பியுள்ளது. பெட்டிக்கடை துவங்கி பெரிய வணிக வளாகங்கள் வரை, பனியன் ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சியை சார்ந்தே உள்ளது. லாபம் குறைந்ததாலோ, நஷ்டம் ஏற்படுவதாலோ போராட்டம் நடத்தவில்லை. பனியன் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக போராடுகிறோம்.

போராட்ட நோக்கத்தை விளக்கி, மக்கள் ஆதரவு பெறப்படும். போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட, பிற மாவட்ட ஜவுளித்துறையினரிடம் பேசி வருகின்றனர். வரும் 16ல் துவங்கும் போராட்டம், மாநிலம் தழுவிய போராட்டமாக நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
04-மே-202214:33:53 IST Report Abuse
raja இதற்க்கு ஏன் தனியாக ஒரு குழு அமைத்து பஞ்சு உற்பத்தியாகும் நாடுகளுக்கு விடியல் அரசே நேரடியாக சென்று இறக்குமதி செய்ய கூடாது... உக்ரேனுக்கு சென்று தமிழர்கலை காப்பாற்றிய இந்த திருட்டு திராவிட மாடல் அரசு இலங்கைக்கு சென்று இலங்கை தமிழர்களை காப்பாற்ற போகும் இந்த திருட்டு திராவிட மாடல் அரசு கோயமுத்தூர் திருப்பூர் ஈரோடு தமிழனுக்காக இதை செய்யலாமே.....கேடுகெட்ட விடியல் தமிழகத்துக்கு...
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
04-மே-202213:14:41 IST Report Abuse
jayvee விவசாயம் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய அரசு முழு தடை செய்யவேண்டும்.. எங்கள் ஸ்டாலின் ஒரு வேலை பிரதமரானால் இந்த சட்டத்தில் தான் முதல் கையொப்பம் இடுவார்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-மே-202211:12:49 IST Report Abuse
Ramesh Sargam இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஒரு சுமுகமான தீர்ப்பு காண்பதை விட்டு விட்டு, ஸ்டாலின் தலைமையிலான அரசு, எப்பொழுதும் மொழியை வைத்து அரசியல் செய்வது, மோடியையும் மத்திய அரசையும் பொழுது 'விடிந்தால்' குறை கூறிக்கொண்டிருப்பது, மதத்தை வைத்து அரசியல் செய்வது என்று காலத்தை ஒட்டிக்கொண்டிருப்பது சரியல்ல. போதாக்குறைக்கு நரிக்குறவர் வீட்டில் போட்டோ சூட் செய்வது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X