பாமாயில் விலை இரட்டிப்பு: பிற சமையல் எண்ணெய் விலை உயரவும் வாய்ப்பு

Updated : மே 04, 2022 | Added : மே 04, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
கோவை: சாதாரண மற்றும் ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாமாயில் ஏற்றுமதி செய்ய இந்தோனேஷியா தடை விதித்துள்ளதால், அதன் விலை நம் நாட்டில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், விலை உயரும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.ரஷ்யா - உக்ரைன் இடையே, பிப்., 24ல் போர் துவங்கியது, அப்போது கோவையில் ஒரு லிட்டர் பாமாயில், 80 முதல் 90 ரூபாய்க்கு விற்றது. தற்போது 180 ரூபாய்க்கு விற்கிறது. இரு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: சாதாரண மற்றும் ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாமாயில் ஏற்றுமதி செய்ய இந்தோனேஷியா தடை விதித்துள்ளதால், அதன் விலை நம் நாட்டில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், விலை உயரும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.latest tamil news
ரஷ்யா - உக்ரைன் இடையே, பிப்., 24ல் போர் துவங்கியது, அப்போது கோவையில் ஒரு லிட்டர் பாமாயில், 80 முதல் 90 ரூபாய்க்கு விற்றது. தற்போது 180 ரூபாய்க்கு விற்கிறது. இரு மடங்கு விலை உயர்ந்துள்ளது.
இந்த இரட்டிப்பு விலை உயர்வுக்கு, ரஷ்யா- உக்ரைன் போர் தான் காரணம் என்கின்றனர் எண்ணெய் வியாபாரிகள். கடலை, தேங்காய், சூரியகாந்தி, நல்லெண்ணெய்க்கு மாற்றாக சாதாரண மற்றும் ஏழை மக்கள் பயன்படுத்தும் எண்ணெய் பாமாயில்.விலை மலிவாகவும் எளிதாகவும் கிடைப்பதால் பயன்படுத்துகின்றனர். ரோட்டோர உணவகங்கள், டீ ஸ்டால்கள் முதல் ஸ்டார் ஓட்டல்கள் வரை பாமாயில் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

பாமாயிலை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இந்தோனேஷியா, மலேசியா. அதற்கு இணையாக சூரியகாந்தி எண்ணெய்யைஉக்ரைனும், அர்ஜென்டினாவும் ஏற்றுமதி செய்கின்றன.நமது நாட்டில் பாமாயிலும், சூரியகாந்தி எண்ணெயும் சம அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஓராண்டுக்கு ஒரு கோடியே 30 லட்சம் டன் பாமாயில் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது.


latest tamil news
தற்போது ரஷ்யா - உக்ரைன் போர் நீடிப்பதால், இந்தோனேஷியாவில் இருந்து பாமாயில் ஏற்றுமதி செய்ய ஏப்., 28 முதல் தடை விதிக்கப்பட்டது. மலேசியாவில் இருந்து மட்டும் உலக நாடுகளுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது.

அனைத்து நாடுகளின் பாமாயில் தேவையை நிறைவு செய்ய மலேசியாவால் முடியவில்லை. இதன் காரணமாக, சில கட்டுப்பாடுகளுடன் பாமாயிலை வழங்கி வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, கோவை மாவட்ட தலைவர் இருதயராஜா கூறியதாவது:இந்தோனேஷியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்ததால் தற்போது மலேசியாவை நாம் நம்பி இருக்கிறோம். அதனால் விலை உயர்ந்து விட்டது.தற்போது கோவையில் லிட்டர் ஒன்றுக்கு பாமாயில், 170 முதல் 180 ரூபாய்க்கு விற்கிறது. இது 200 ரூபாய் வரை உயரும். இந்த எண்ணெய் விலை உயர்வால், மற்ற எண்ணெய் விலைகளும் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
04-மே-202218:13:30 IST Report Abuse
Vijay D Ratnam தமிழ்நாட்டில் இன்னும் அதிகமாக தென்னை விவசாயத்தை அதிகப்படுத்த வேண்டும். இந்த ரீபைண்ட் ஆயில், பாமாயில் உபயோகத்தை குறைக்கவேண்டும். டெல்டா பகுதிகளிலேயே இப்போது தென்னை மரங்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கேட்டால் மரம் எற ஆட்கள் கிடைப்பதில்லை என்று காரணம் சொல்கிறார்கள். அது போல கடற்கரைக்கு அருகாமையில் கூட செழித்து வளரும் தன்மை கொண்ட பனைமரத்தை அதிகப்படுத்தவேண்டும். எண்ணூர் முதல் சென்னை, பாண்டிச்சேரி, காரைக்கால், கோடியக்கரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்யாகுமரி, குளச்சல் வரையிலான ஆயிரம் கிமீ மேற்பட்ட தமிழக கடற்கரை ஓரங்களில் 25 மீட்டர் அளவுக்கு ஒரு அரண் அமைப்பது போல பனைமரங்கள் வளர்க்கவேண்டும். இது நாளைக்கே செய்ய கூடிய விஷயம் அல்ல. இதை தொடக்கி வைத்தால் சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், கடல் ஆர்வலர்கள், பறவைகள் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சினிமா நடிகர்களின் ரசிகர்கள், அரசியல் கட்சி தொண்டர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள் என்று அணைத்து மக்களையும் ஈடுபட வைத்துவிட்டால் இது ஐந்து ஆண்டுகளில் சாத்தியமாகும். அதன் பிறகு அதன் பலனை நம் அடுத்த தலைமுறைகள் நூற்றாண்டு கடந்து அனுபவிக்கும். யாராவது முதல்படி எடுத்து வைப்பார்களா. பின் தொடர நான் ரெடி, என்னைப்போல கோடிக்கணக்கானோர் வருவார்கள்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
04-மே-202216:46:06 IST Report Abuse
Bhaskaran தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வூதியம் கூட இல்லாமல் காலம் கழிக்கும் தொழிலார் பாடு மிகவும் சிரமம்
Rate this:
Cancel
04-மே-202210:43:37 IST Report Abuse
ஆரூர் ரங் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டுக் கொண்டிருந்த புன்செய் நிலங்களுக்கு அவசியமின்றி நீர்ப்பாசன வசதி செய்து கொடுத்ததனால் அவ்விவசாயிகள் நெல்,கரும்பு சாகுபடிக்கு மாறினர். இப்போ அரசின் கிடங்குகளில் நெல்லும் சர்க்கரை😪 கோதுமை ஆகியவை மக்கி வீணாகின்றன. விவசாய நாடான நாம் எண்ணெய்த் தட்டுப்பாட்டால் இறக்குமதி செய்கிறோம். நேரு, மன்மோகன் போன்ற புத்திசாலிகளது சாதனை இது. நெல் கரும்பு சாகுபடிக்கு உச்சவரம்பு விதித்து எண்ணெய் வித்து உற்பத்திக்கு ஊக்கம் கொடுத்தால் மீள முடியும்.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
04-மே-202213:44:39 IST Report Abuse
Mirthika Sathiamoorthiநேரு மன்மோஹனுக்கப்புறம் இந்தியாவில் வரலாறே இல்லை... அப்படித்தானே?...
Rate this:
Narayanan Muthu - chennai,இந்தியா
04-மே-202213:50:25 IST Report Abuse
Narayanan Muthuகையாலாகாதவனுக்கு கிடைத்தது சாக்கு. நேருவை குறை கூறி தப்பிக்க நினைப்பது ஒரு வித கோழைத்தனம்....
Rate this:
Narayanan Muthu - chennai,இந்தியா
04-மே-202213:54:47 IST Report Abuse
Narayanan Muthuஏதோ இந்த பாமாயில் விலை மட்டுமே ஏறியது போல் செய்தி போட்டு மக்களை ஏமாற்றும் வேலையை நிறுத்தி கொள்ளுங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X