இப்ப அவங்க முறை... அடிச்சு விளையாடுறாங்க!

Updated : மே 04, 2022 | Added : மே 04, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: கிழக்கு கடற்கரை சாலை என்பது அழகான பெயர்; இந்தியா முழுதும் தெரிந்த பெயர். கருணாநிதி பெயரை வேறு எதற்காவது வைக்கலாம். அதை விடுத்து, கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதி பெயர் வைப்பதை, பொதுமக்களே விரும்பமாட்டார்கள். இதே நிலையில் போனால், தமிழ்நாட்டையும், 'கருணாநிதி நாடு' என மாற்றி விடுவர்.உங்க ஆட்சியில, 'அம்மா சிமென்ட்,
ஜெயகுமார், உதயா

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: கிழக்கு கடற்கரை சாலை என்பது அழகான பெயர்; இந்தியா முழுதும் தெரிந்த பெயர். கருணாநிதி பெயரை வேறு எதற்காவது வைக்கலாம். அதை விடுத்து, கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதி பெயர் வைப்பதை, பொதுமக்களே விரும்பமாட்டார்கள். இதே நிலையில் போனால், தமிழ்நாட்டையும், 'கருணாநிதி நாடு' என மாற்றி விடுவர்.


உங்க ஆட்சியில, 'அம்மா சிமென்ட், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா உணவகம்'னு திரும்பும் திசையெல்லாம் ஜெயலலிதா படத்தோட பெயர் சூட்டி, மக்களை திணற அடிச்சது மறந்துடுச்சா...? இப்ப அவங்க முறை... அடிச்சு விளையாடுறாங்க!


நடிகரும், தயாரிப்பாளருமான உதயா, முதல்வருக்கு அனுப்பிய கடிதம்: தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் கோரிக்கை போன்ற எந்த ஒரு விஷயத்திலும், எள்ளளவும் தாமதமின்றி எக்ஸ்பிரஸ் வேகத்தில்செயலாற்றும் தாங்கள், எங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து, நடிகர் விவேக் வாழ்ந்த சாலைக்கு அவரது பெயரைச் சூட்டும் அரசாணையை வெளியிட்டு உள்ளீர்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில், 'மாடர்ன்' மனு நீதி சோழனாகவும், கலைஞர்களை கவுரவிப்பதில் அதியமானின், 'அப்டேட்டட் வெர்சனாகவும்' உள்ளீர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.


கவித... கவித... முதல்வரை புகழ்வதில், தமிழக அமைச்சர்கள் எல்லாம் உங்களிடம், 'டியூஷன்' எடுத்துக்கணும் போலிருக்குதே!


தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பேட்டி: தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடந்த தேர் விபத்தில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். திருவிழாவுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமை. அஜாக்கிரதையாக இருந்த அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும்.குழு அமைத்து, விசாரணை நடத்துவது கண்துடைப்பு. இனி வரும் காலங்களில், இதுபோன்ற விபத்துக்கள் நடக்க கூடாது என்றால், அரசு அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தண்டனை வழங்க வேண்டும். தண்டனை கொடுத்தால் தான், மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.


latest tamil news
உங்க வீட்டுக்காரரின் சினிமா வசனம்மாதிரியே பேசுறீங்களே. எது எப்படியோ... இந்த மாதிரி பேட்டி தந்து,நானும் களத்துல இருக்கேன்னு காட்டிக்கிறீங்க!


ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை: இன்றைய கிழக்கு கடற்கரை சாலைக்கு சோழர் காலத்தில், 'ராஜராஜன் பெருவழி' என்று பெயர். மாமன்னர் ராஜராஜ சோழன், பாண்டியர்கள், சேரர்கள் பெயர்களை வைக்காமல், தமிழர் அடையாளத்தை மறைப்பது தான் திராவிட மாடல். ஓமந்துாரார் ராமசாமி ரெட்டியாருக்கு அரசினர் தோட்டத்தில் சிலை வைக்காமல், கருணாநிதிக்கு சிலை வைப்பது தான் விடியல் அரசின் சாதனை.


போற போக்கை பார்த்தால், தமிழக அரசின் தலைமை செயலகத்துக்கும், 'கருணாநிதி மாளிகை' என பெயர் சூட்டி விடுவரோ?புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
04-மே-202215:42:56 IST Report Abuse
s t rajan வங்கக் கடலை கலைஞர் கடல் என்றும் தமிழகத்தை கலைஞர் குடும்ப வீடு என்றும் கூட மாத்திடுவாங்க. அப்பா பேரை repair ஆக்கிடாம ஓயமாட்டாங்க. நல்லது தான்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
04-மே-202214:01:24 IST Report Abuse
jayvee சொந்த திறமை இல்லாமல், ஆளுமை இல்லாமல் ஆளும் திறன் இல்லாமல் 'அம்மாவின் படம் கொண்டு, அம்மாவின் பெயர் கொண்டு அம்மாவின் படத்திற்குப்பின்னால் ஒளிந்து கொண்டு ஆட்சி நடத்தியதின் விளைவுதான் ஒப்போது வலுவில்லாத எதிர்க்கட்சியை உள்ள நிலைமை.. MGR பெயரை மறைக்க நினைத்த ஜெயா மற்றும் சசிகலா .. அதை அப்படியே பின்பற்றிய EPS & OPS . இப்போது BJP க்கும் திமுகவுக்கு நடக்கும் மோதலில், சம்பந்தமே இல்லாமல் மண்டைக உடையும் அதிமுகவை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது ..
Rate this:
Cancel
R MANIVANNAN - chennai,இந்தியா
04-மே-202213:00:45 IST Report Abuse
R MANIVANNAN போற போக்கை பார்த்தால், தமிழக அரசின் தலைமை செயலகத்துக்கும், 'கருணாநிதி மாளிகை' என பெயர் சூட்டி விடுவரோ? ...... நல்ல ஐடியாவாய் இருக்கிறதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X