கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாவட்ட மாநாடு

Added : மே 04, 2022 | |
Advertisement
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின், மாவட்ட மாநாடு பவானி அருகே லட்சுமி நகரில் நேற்று நடந்தது. செயலாளர் லதா தலைமை வகித்தார். இணை செயலாளர் சாந்தா வரவேற்றார். மாநில தலைவர் செந்தாமலர், பொது செயலாளர் உஷாராணி கோரிக்கை குறித்து பேசினர்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மகப்பேறு இறப்பு சிசு இறப்பு மரணத்தில், கிராம சுகாதார செவிலியர் முழு பொறுப்பாவதை


தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின், மாவட்ட மாநாடு பவானி அருகே லட்சுமி நகரில் நேற்று நடந்தது. செயலாளர் லதா தலைமை வகித்தார். இணை செயலாளர் சாந்தா வரவேற்றார். மாநில தலைவர் செந்தாமலர், பொது செயலாளர் உஷாராணி கோரிக்கை குறித்து பேசினர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மகப்பேறு இறப்பு சிசு இறப்பு மரணத்தில், கிராம சுகாதார செவிலியர் முழு பொறுப்பாவதை உடனடியாக கைவிட வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். கொரோனோ காலங்களில் பணியாற்றிய கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், சுகாதார ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சாரதாம்பாள் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் புஷ்பா நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X