மாமூல் தர மறுத்த மெடிக்கல் ஷாப் ஓனர் அடித்துக்கொலை

Added : மே 04, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, மாமூல் தர மறுத்த மருந்து விற்பனை கடை உரிமையாளரை அடித்துக் கொலை செய்த, ரவுடிகள் இருவரை பெரம்பலுார் போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலுார் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்,44, இவர், இதே கிராமத்தில் மருந்து விற்பனை கடை நடத்தி வந்தார். இவரிடம் இதே ஊரைச் சேர்ந்த பிரபல ரவுடிகளான பெரியசாமி மகன் பிரபாகரன், 29, ஆனந்த் மகன்
மாமூல் தர மறுத்த மெடிக்கல் ஷாப் ஓனர் அடித்துக்கொலை

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, மாமூல் தர மறுத்த மருந்து விற்பனை கடை உரிமையாளரை அடித்துக் கொலை செய்த, ரவுடிகள் இருவரை பெரம்பலுார் போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலுார் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்,44, இவர், இதே கிராமத்தில் மருந்து விற்பனை கடை நடத்தி வந்தார். இவரிடம் இதே ஊரைச் சேர்ந்த பிரபல ரவுடிகளான பெரியசாமி மகன் பிரபாகரன், 29, ஆனந்த் மகன் ரகுநாத், 27, ஆகிய இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு 10 மணியளவில் மருந்து கடை மூடும் நேரத்தில் வந்து, மிரட்டி மாமூல் வாங்கி சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரவுடிகள் இருவரும் வந்து, நாகராஜனிடம் மாமுல் கேட்டு மிரட்டினர். ஆனால், மாமூல் தர மறுத்ததுடன், இதுகுறித்து ரவுடிகளின் பெற்றோரிடம் நாகராஜன் புகார் தெரிவித்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த ரவுடிகள் இருவரும் நேற்று இரவு 11 மணியளவில் நாகராஜன் வீட்டுக்கு சென்று மருந்து வேண்டும் கடையில் வந்து எடுத்துத் தருமாறு கூறி அழைத்துச் சென்று, ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம் வைத்து பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.

தகவலறிந்த நாகராஜனின் குடும்பத்தினர் அவரை மீட்டு பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். நாகராஜனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள ரவுடிகள் பிரபாகரன், ரகுநாத ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும், ஏற்கனவே வழிப்பறி, கொலை மிரட்டல் போன்ற பல வழக்குகளில் பெரம்பலுார் போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
05-மே-202206:16:11 IST Report Abuse
Mani . V இந்த ரெண்டு ரௌடியும் நம்ம கட்சிக்காரனாகத்தான் இருக்கும்.
Rate this:
Cancel
Mohan - COIMBATORE,இந்தியா
04-மே-202217:06:03 IST Report Abuse
Mohan அட நல்ல பாருங்க அவன் அவங்க ஊரு கவுன்சிலர் இல்லேன்னா வார்டு மெம்பெற தான் இருப்பான்...
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
04-மே-202216:01:10 IST Report Abuse
raghavan தலைப்பு செய்தியாக வந்தால்தான் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயிருப்பது தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X