மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமனம்

Updated : மே 04, 2022 | Added : மே 04, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
சென்னை: ‛மகரிஷி சரக்சபத்' உறுதிமொழி விவகாரத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் அவர் , டீனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் ‛ஹிப்போகிரட்டிக்' உறுதிமொழிக்கு பதிலாக,
மதுரை, மருத்துவக்கல்லூரி, டீன், ரத்தினவேல், நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ‛மகரிஷி சரக்சபத்' உறுதிமொழி விவகாரத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் அவர் , டீனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் ‛ஹிப்போகிரட்டிக்' உறுதிமொழிக்கு பதிலாக, மாணவர் தலைவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட உறுதிமொழிக்கு ‛மகரிஷி சரக்சபத்' உறுதிமொழியை ஏற்றனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரியின் டீன் ரத்தினவேல் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் ‛மகரிஷி சரக்சபத்' உறுதிமொழி விவகாரம் முதல்வருக்கோ, பேராசிரியர்களுக்கோ தெரியாது என மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் விளக்கமளித்தார்.


மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருத உறுதிமொழி வாசித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் மீது அரசு நடவடிக்கை எடுத்தது. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு மதுரை சென்று விசாரணை நடத்தினார். சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பது பற்றி டீன் ரத்தினவேலுக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது; அவர் மீது எந்த தவறும் இல்லை என தெரிய வந்தது. சமஸ்கிருத கருத்துக்கள் கொண்ட உறுதிமொழியை மாணவர்கள் தவறுதலாக பதிவிறக்கம் செய்ததே சர்ச்சைக்கு காரணம் என தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, ரத்னவேல் மீது எடுத்த நடவடிக்கையை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக ரத்தினவேல் மீண்டும் நியமிக்கப்படுவதாக சட்டசபையில் சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார். ரத்தினவேல், கோவிட் நோய் பரவிய காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர். எனவே, அவர் அளித்த விளக்கத்தை அரசு ஏற்றுக் கொண்டது என்றார், சுப்பிரமணியன்.

latest tamil news



இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‛மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமிக்கப்பட்டுள்ளார். கோவிட் காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர் நேரில் சந்தித்து அளித்த விளக்கத்தையேற்று முதல்வரின் உத்தரவுப்படி அவர் மீண்டும் அதே பணியில் ஈடுபட உள்ளார்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
05-மே-202201:36:57 IST Report Abuse
Fastrack முதல்வரும் ரத்தினவேலுவும் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்கள் ..மாசு இவர்களை பார்த்து கற்றுக்கொள்ளலாம் .
Rate this:
Cancel
04-மே-202218:29:35 IST Report Abuse
ஆரூர் ரங் எல்லாமே முடிஞ்சதா? நீங்க படிக்கிற காலத்துல இருந்து அந்த ஹாஸ்டல்🤔 மஹா மட்டமா இருக்கே. எதாவது பண்ணுவீங்களா?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
04-மே-202217:56:28 IST Report Abuse
DVRR ஏன்???என்னாச்சி மாசு????ஒன்றிய ஆணையா???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X