'சென்னை பஸ்' செயலி அறிமுகம்

Added : மே 04, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை :சென்னை மாநகர பஸ்களின் வருகையை துல்லியமாக அறியும் வகையில் நிறுவப்பட்டுள்ள, 'சென்னை பஸ்' செயலியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்தார்.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 32 பணிமனைகளின் வாயிலாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 3,454 பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த பஸ்களில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணி
 'சென்னை பஸ்' செயலி அறிமுகம்

சென்னை :
சென்னை மாநகர பஸ்களின் வருகையை துல்லியமாக அறியும் வகையில் நிறுவப்பட்டுள்ள, 'சென்னை பஸ்' செயலியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்தார்.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 32 பணிமனைகளின் வாயிலாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 3,454 பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த பஸ்களில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணி நிறைவடைந்துஉள்ளது.இதையடுத்து, பஸ்களின் வருகை, வழித்தட எண், புறப்படும் இடம், சேரும் இடம் உள்ளிட்டவற்றை பயணியர் அறிந்து, அதற்கேற்ப பயணத்தை திட்டமிடும் வகையில், 'சென்னை பஸ் லேம்ப் ஆப்' என்ற செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.'கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து, இந்த செயலியை பயணியரின் மொபைல் போனில் 'டவுன்லோடு' செய்து பயன்படுத்தலாம்.இந்த செயலியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நேற்று தலைமைச் செயலகத்தில் அறிமுகப்படுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ 'சென்னை பஸ்' செயலியை போன்று 'தமிழ்நாடு பஸ்' செயலியை அறிமுகப்படுத்த வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X