இந்தியாவுக்கு சவால் விடுப்போருடன் ராகுல் நட்பு: பா.ஜ.,

Updated : மே 05, 2022 | Added : மே 05, 2022 | கருத்துகள் (42) | |
Advertisement
புதுடில்லி: நேபாள முன்னாள் துாதரின் மகளும், பத்திரிகையாளருமான சும்னிமா உதாசின் திருமண நிகழ்வில், காங்., - எம்.பி., ராகுல் பங்கேற்றது சர்ச்சையாகி உள்ள நிலையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு சவால் விடுக்கும் நபர்களுடன், ராகுல் நட்பு பாராட்டி வருவதாக பா.ஜ., சாடி உள்ளது.காங்., - எம்.பி., ராகுல், நம் அண்டை நாடான நேபாளத்தில், இரவு விடுதியில் நடந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற 'வீடியோ'
Rahul, Rahul Gandhi, Congress, BJP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: நேபாள முன்னாள் துாதரின் மகளும், பத்திரிகையாளருமான சும்னிமா உதாசின் திருமண நிகழ்வில், காங்., - எம்.பி., ராகுல் பங்கேற்றது சர்ச்சையாகி உள்ள நிலையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு சவால் விடுக்கும் நபர்களுடன், ராகுல் நட்பு பாராட்டி வருவதாக பா.ஜ., சாடி உள்ளது.

காங்., - எம்.பி., ராகுல், நம் அண்டை நாடான நேபாளத்தில், இரவு விடுதியில் நடந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை வைத்து, பா.ஜ., தலைவர்கள் ராகுலை விமர்சித்தனர்.

இதற்கு பதிலளித்த காங்., பொதுச் செயலர் ரந்தீப் சுர்ஜேவாலா, 'சில ஆண்டுகளுக்கு முன், பாக்., பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிபின் பிறந்த நாளை கொண்டாட, பிரதமர் மோடி அழைக்காமலே சென்றார். 'ஆனால், ராகுல் தன் தோழியும், பத்திரிகையாளருமான சும்னிமா உதாசின் திருமணத்தில் பங்கேற்க சென்றுள்ளார்' என கூறியிருந்தார்.


latest tamil news




இதற்கு, பா.ஜ., மூத்த தலைவர் அமித் மால்வியா கூறுகையில், ''இந்திய ஒருமைப்பாட்டிற்கு சவால் விடுக்கும் நபர்களுடன், ராகுல் எப்போதும் நட்பு பாராட்டுவது ஏன்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

உத்தரகண்டின் சில பகுதிகளை, தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதிகளாக குறிப்பிட்டு, நேபாளம் ஒரு வரைபடத்தை வெளியிட்டது. அதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் நேபாளத்திற்கு சும்னிமா ஆதரவு தெரிவித்திருந்தார். சும்னிமா உதாஸ், மியான்மருக்கான முன்னாள் நேபாள துாதரான பீம் உதாசின் மகள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
05-மே-202220:14:46 IST Report Abuse
sankaseshan காங்கிரகாரன் பிரிவினை வாதி களுடன் கைகோர்ப்பது அதிசயமில்லை கொள்ளுத்தாத்தா நேரு காலத்தில் இருந்து தொடர்கிறது ஜின்னாவுக்கும் சீனாவுக்கும் நெருங்கிய தோழன்
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
05-மே-202216:56:39 IST Report Abuse
Rpalnivelu நாட்டுக்கும் கேடு வீட்டுக்கும் கேடு, தண்ட சோறு
Rate this:
Cancel
RAMESH - chennai,இந்தியா
05-மே-202214:31:20 IST Report Abuse
RAMESH இவனை பகடையா வச்சு காசு பார்க்க முயற்சிக்கும் சுயநல அரசியல் வாதிகள். எப்படி உருப்படும் இவனும் இவனது கட்சியும் . இந்த விஷயம் வெளியில் தெரிந்தது , தெரியாமல் இது போல் எவ்வளவோ . இவன் குடும்பத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்றைக்குமே தேசிய நலனோ இந்திய மக்கள் மீது அக்கறையோ துளி கூட கிடையாது. பணம் பணம் பணம் . கொள்ளை அடிக்கணும். நாட்டாமை பண்ணனும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X