வெயில் காலத்தில் குளிரூட்டும் கருவி, குளிர் காலத்தில் கதகதப்பூட்டும் கருவி. இப்படி உலகெங்கும் வசிப்பிட தட்பவெப்பத்தை பராமரிக்கும் கருவிகள் இயங்குவதால், சுற்றுச்சுழலுக்குக் கேடு அதிகரிக்கிறது.இதற்கு மாற்றாக, அமெரிக்காவிலுள்ள லைப்லேப்ஸ், இருவகை உடைகளை உருவாக்கியிருக்கிறது. வெளி தட்பவெப்பத்தை கையாள்வதற்குப் பதிலாக, இந்த உடைகள், அணிபவரின் உடல் வெப்பநிலையை சற்றே மாற்றியமைக்க உதவுகிறது.
உதாரணமாக, லைப்லேபின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கூல் லைப் டி சர்ட்டை அணிபவரின் உடல் வெப்ப நிலை 3 டிகிரி பாரன்ஹைட் அளவுக்கு குறைவாகவே இருக்கும்.மறுசுழற்சி செய்து, மூலக்கூறு அளவில் மாற்றியமைக்கப்பட்ட பாலியெத்திலினால் ஆன இந்த டீ சர்ட், அணிபவரின் உடல் சூட்டை வேகமாக வெளியே கடத்தும் தன்மை கொண்டது.
இதனால், கூல் லைப் டீ சர்ட்டை அணிபவர் சற்று குளிர்ச்சியாகவே உணர்வார். இதை வெயில் காலத்தில் அணிந்துகொண்டால், அவருக்கு வீட்டில் மின் விசிறியோ, 'ஏசி' கருவியோ தேவைப்படாது.அதேபோல வார்ம் லைப் டீ சர்ட்டை அணிபவருக்கு உடல் எப்போதும் சற்று கதகதப்பாகவே இருக்கும். இதை குளிர் அதிகமுள்ள பகுதிகளில் அணிந்தால், வீட்டுக்குள் விறகு அடுப்பு அல்லது மின் சூடேற்றும் அடுப்பு போன்றவற்றின் பயன்பாட்டை வெகுவாக குறைக்க முடியும்.
லைப் லேபின் அதிகாரிகள், கூல் லைப் மற்றும் வார்ம் லைப் உடைகளை அணியும் வீட்டில் ஆண்டு முழுதும் ஆற்றல் சேமிப்பு அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.ஒரு நபருக்கு ஆண்டுக்கு 153 பவுண்டு கார்பன்டையாக்சைடு காற்றில் கலப்பது தடுக்கப்படும்.கேட்க நன்றாக இருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால், பல வீடுகளில் மின் கட்டணம் குறையும். சூழல் பாதிப்பும் குறையும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE