வணிகர்களின் நலன் பேணும் திமுக ஆட்சி: ஸ்டாலின் பேச்சு

Updated : மே 05, 2022 | Added : மே 05, 2022 | கருத்துகள் (35) | |
Advertisement
திருச்சி: திமுக ஆட்சி வணிகர்களின் நலனை பேணும் ஆட்சியாக எப்போதும் திகழும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.திருச்சி சமயபுரம் அருகே 39வது ஆண்டு வணிகர்கள் சங்க மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்தியது. கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை வணிகர்கள் செய்தனர். அரசுக்கு உதவிய
திமுக, வணிகர்கள், ஸ்டாலின், முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருச்சி: திமுக ஆட்சி வணிகர்களின் நலனை பேணும் ஆட்சியாக எப்போதும் திகழும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

திருச்சி சமயபுரம் அருகே 39வது ஆண்டு வணிகர்கள் சங்க மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்தியது. கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை வணிகர்கள் செய்தனர். அரசுக்கு உதவிய வணிகர்களுக்கு நன்றி சொல்லவே இங்கு வந்துள்ளேன். திமுகவிற்கு எப்போதும் திருப்புமுனை அளிப்பது திருச்சி தான். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்களுக்கான உதவிகளை செய்தது திமுக. இந்த ஆட்சி வணிகர்களின் நலனை பேணும் ஆட்சியாக எப்போதும் திகழும்.


latest tamil news


வணிகர்கள் நலன் காக்கப்பட்டால் தான் அரசு வருவாய் வருவதும் காக்கப்படும் என்பதை இந்த அரசு நன்கு உணர்ந்து வருகிறது. வணிக நலன் வாரியம் சீரமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தோம். அதன்படி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட்டது. தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்டத்தின் கீழ் படிவம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பின்னர், வரிவிதிப்பு முறைகளை மாற்றும்படி ஜிஎஸ்டி மன்றத்தில் திமுக சார்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வணிகர்களுக்கான குடும்பநல இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மே-202207:37:36 IST Report Abuse
ஆரூர் ரங் மாமூல் வாங்கி, ஓசி பிரியாணி சாப்பிட்டு நலம் பேணும்😇 திமுக
Rate this:
Cancel
06-மே-202205:15:56 IST Report Abuse
அப்புசாமி பேணுங்க.. பேணுங்க. அவிங்க நல்லா இருந்தாத்தானே கட்டிங், கமிசன் ஒழுங்கா கிடைக்கும். மக்கள் நாசமாப்போனா நமக்கென்ன?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06-மே-202201:11:40 IST Report Abuse
Ramesh Sargam எது, கடை வீதிகளில் குண்டர்களை அனுப்பி மாமூல் வாங்குவது வணிகர்களின் நலன் பேணுதலா..?? நம்பிட்டோம் போங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X