ம.பி.,யில் நீதிபதியான காய்கறி விற்பவர் மகள்

Updated : மே 06, 2022 | Added : மே 06, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
இந்துார்-மத்திய பிரதேசத்தில், காய்கறி வியாபாரியின் மகள் நீதிபதியாகியுள்ளார்.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்துாரைச் சேர்ந்த அசோக் நாகர் காய்கறி வியாபாரியாக இருக்கிறார். இவரது மகள் அங்கிதா நாகருக்கு, ௨௯, சிறு வயதிலேயே நீதிபதியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதையடுத்து, அவர் சட்டத்தில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இந்துார்-மத்திய பிரதேசத்தில், காய்கறி வியாபாரியின் மகள் நீதிபதியாகியுள்ளார்.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.



latest tamil news



இங்கு, இந்துாரைச் சேர்ந்த அசோக் நாகர் காய்கறி வியாபாரியாக இருக்கிறார். இவரது மகள் அங்கிதா நாகருக்கு, ௨௯, சிறு வயதிலேயே நீதிபதியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதையடுத்து, அவர் சட்டத்தில் பட்டப்படிப்பிலும், பட்ட மேற்படிப்பிலும் தேர்ச்சி பெற்றார்.பின், நீதிபதிகளுக்கான தேர்வை மூன்று முறை எழுதி தோல்வியடைந்தார்.


latest tamil news



எனினும் மனம் தளராத அங்கிதா, நான்காவது முறையாக தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்று நீதிபதியாகியுள்ளார். இது பற்றி அங்கிதா கூறுகையில், ''நீதிபதியாகும் என் கனவு பலித்துவிட்டது. நீதிமன்றத்தை நாடி வரும் சாதாரண மக்களுக்கு தீர்ப்பை உறுதி செய்வதே என் பணி,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
06-மே-202211:40:23 IST Report Abuse
S.kausalya படிக்கும் குழந்தைகள் எந்த நிலையிலும் படிப்பார்கள். எந்த ஒரு சக்தியும் அவர்களின் சாதனை முயற்சியை தடுக்க முடியாது. தமிழ்நாட்டிலேயே தான் மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியாது. போட்டி தேர்வு கூடாது. கல்வி மற்றும் வேலையில் இட ஒதுக்கீடு வேண்டும் என நம் மாணவர்களை நம் திராவிட அரசியல்வாதிகள்,, குறைத்து மதிப்பீடு செய்து அக்குழந்தைகளின் மன திடத்தை asaikkiraargal. தமிழ் நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டை ஒரு அஸ்திரமாக கொள்வதில்லை. முடிந்தால் படிக்கிறார்கள். இல்லையெனில் ஏதோ ஒரு வேலைக்கு போய் விடுகிறார்கள்.
Rate this:
Cancel
06-மே-202211:25:20 IST Report Abuse
theruvasagan தேர்விலே மூணு தடவை தோல்வியடைஞ்சும் துவண்டு போகாமல் தற்கொலைக்கு முயற்சிக்காமல் துணிச்சல் விடாமுயற்சி இவை மூலமாக பெற்ற வெற்றி உண்மையான உழைப்புக்கு கிடைத்த மகத்தான அங்கீகாரம். அங்கே தோல்வி பெற்றவர்களை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தூண்டிவிடவும் பிறகு அந்த சாவை வைத்து ஈனமான சுயநல அரசியல் செய்யவும் திட்டம் போடும் பிணந்தின்னி கழுகுகள் இல்லாதது அந்த மாநிலம் செய்த அதிருஷ்டம்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
06-மே-202209:01:53 IST Report Abuse
அசோக்ராஜ் மத்தியப் பிரதேசத்தில் ஒரு பகுதிக்கு கடந்த காலத்தில் த்ராவிஷப் பிரதேசத்திலிருந்து பெரியார் மண்ணைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X