உக்ரைன் போரால் உணவுப் பொருள் தட்டுப்பாடு: இணைந்து செயல்பட இந்தியா, பிரான்ஸ் முடிவு

Updated : மே 06, 2022 | Added : மே 06, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பாரிஸ்-உக்ரைன் - ரஷ்யா போரால் ஏற்பட்டுள்ள உயிர் பலிக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இதன் தாக்கத்தால் உணவுப் பொருட்களுக்கு ஏற்படும் தட்டுப்பாட்டை தவிர்க்க, இந்தியாவும், பிரான்சும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் இறுதிக் கட்டமாக, பிரான்சின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாரிஸ்-உக்ரைன் - ரஷ்யா போரால் ஏற்பட்டுள்ள உயிர் பலிக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இதன் தாக்கத்தால் உணவுப் பொருட்களுக்கு ஏற்படும் தட்டுப்பாட்டை தவிர்க்க, இந்தியாவும், பிரான்சும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.



latest tamil news



பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் இறுதிக் கட்டமாக, பிரான்சின் பாரிஸ் நகருக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரானை நேற்று முன்தினம் இரவு சந்தித்துப் பேசினார்.சமீபத்தில் நடந்த தேர்தலில் வென்று இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுள்ள மேக்ரானுக்கு, மோடி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :உக்ரைன் - ரஷ்யா போரால் ஏற்பட்டுள்ள உயிர் பலி, மனிதநேய பிரச்னைகளுக்கு இரு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அங்கு, உடனடியாக வன்முறையை நிறுத்தி, பேச்சு வாயிலாக தீர்வு காணும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.இந்தப் போரால் உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலகிலேயே அதிகளவில் கோதுமையை உற்பத்தி செய்யும் உக்ரைனில், போரால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், உலக அளவில் உணவு பொருட்கள், உரம் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இந்த தாக்கத்தை தவிர்க்க, இந்தியாவும், பிரான்சும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுஉள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த சந்திப்பு குறித்து நம் வெளியுறவுத் துறை செயலர் வினய் மோகன் குவாத்ரா கூறியதாவது:பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இடையேயான பேச்சில், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, ராணுவத் துறையில் ஒத்துழைப்பு அளிப்பது உள்ளிட்டவை குறித்து விரிவாக பேசப்பட்டது. குறிப்பாக, உக்ரைன் - ரஷ்யா போர் குறித்தும், அதனால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். இந்த விவகாரத்தில், இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



இதற்கிடையே, வரும் 2025க்குள் 20 ஆயிரம் இந்திய மாணவர்களை பிரான்சில் படிக்க வகை செய்யும் ஒப்பந்தமும், இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையே கையெழுத்தானது. பிரான்ஸ் ஆதரவுகூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது:ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், அணுசக்தி வினியோகக் குழு உள்ளிட்ட அமைப்புகளில் இந்தியா உறுப்பினராவதற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக பிரான்ஸ் கூறியுள்ளது. இந்தோ - பசிபிக் பிராந்தியந்தில் அமைதி நிலவுவதற்கு ஒருங்கிணைந்து செயலாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மே-202205:29:02 IST Report Abuse
அப்புசாமி இதைச் சொல்றதுக்கா ஃப்ரான்ஸ் வரை போகணும்? பைடனிடம் வீடியோ காலில் பேச வில்லையா? அதே மாதிரி பேசியிருக்கலாமே. வேறு ஏதோ வியாபார விஷயம் இருக்கு. விரைவில் அதுபற்றிய அறிவிப்பை வேறு அமைச்சர்களோ, இல்லை சிறு அதிகாரிகளோ வெளியிடுவார்கள். இதெல்லாம் ராஜதந்திரம்.
Rate this:
Jaggu - ,
06-மே-202211:06:57 IST Report Abuse
Jagguமற்ற நாடுகளுக்கும் போக வேண்டும். பேச்சு வார்த்தைகள் நிறைய உள்ளது....
Rate this:
Cancel
06-மே-202204:48:02 IST Report Abuse
அப்புசாமி இன்னும்10, 15 வருஷத்துக்கு உக்ரைன் போரை வெச்சே ஓட்டிறலாம்னு முடிவு செய்யப்பட்டது. நேருவுக்கு விமோசனம் குடுக்க முடிவெடுத்து விட்டார்.
Rate this:
Jaggu - ,
06-மே-202211:08:35 IST Report Abuse
Jaggu வெயில் ஜாஸ்தியான இப்படித்தான் கமன்ட் வரும். போய் ரெஸ்ட் எடுத்துக்கோப்பா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X