சேகர் ரெட்டி நிரபராதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Updated : மே 06, 2022 | Added : மே 06, 2022 | கருத்துகள் (114) | |
Advertisement
புதுடில்லி-தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்து, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொழிலதிபர் சேகர் ரெட்டி தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.கடந்த 2016ல், வருமான வரித் துறையினர் சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்து, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



latest tamil news



தொழிலதிபர் சேகர் ரெட்டி தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.கடந்த 2016ல், வருமான வரித் துறையினர் சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் சோதனை நடத்தி, 147 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மத்திய அரசு பண மதிப்பிழப்பை அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே, சேகர் ரெட்டியிடம் 34 கோடி ரூபாய் மதிப்பில், புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, சேகர் ரெட்டி மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.


latest tamil news



இந்நிலையில், அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி, சேகர் ரெட்டி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து, சேகர் ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'இந்த வழக்கில் சேகர் ரெட்டி நிரபராதி' என கூறி, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்தது.

Advertisement




வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
06-மே-202217:41:27 IST Report Abuse
DVRR /////
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
06-மே-202217:11:37 IST Report Abuse
M  Ramachandran இது அடுத்த மஞ்ஜ துண்டு கேசு.
Rate this:
Cancel
ThamizhMagan - Chennai,இந்தியா
06-மே-202215:21:19 IST Report Abuse
ThamizhMagan 2016 -ல் பறிமுதல் செய்யப்பட ருபாய் நோட்டுக்கள்/தங்கத்திற்கு அமலாக்கத்துறை தொடுத்த குற்றச்சாட்டு என்ன? வழக்கு தொடுத்த பின் 2022-ல் மேலும் விசாரணை ஏன்? மேல் முறையீட்டுக்கு தீர்ப்பு, மேல் விசாரணையைத்தானே தள்ளுபடி செய்யும் 'நிரபராதி' என்ற முடிவுக்கு எப்படி தாவப்பட்டது? அதற்கு உச்ச நீதி மன்றம் கொடுத்த காரணம் என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X