'ரஷ்ய சொத்துக்களை விற்று உக்ரைனை மறுசீரமைக்க வேண்டும்' - ஐரோப்பிய யூனியன் தலைவர்

Updated : மே 06, 2022 | Added : மே 06, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புருசல்ஸ்: ரஷ்ய சொத்துக்களை விற்று உக்ரைனை மறுசீரமைக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தலைவர் சார்லஸ் மிஷல் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடும் போர் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஐரோப்பிய யூனியன் தலைமை, நேட்டோ, அமெரிக்கா உள்ளிட்டவை தங்கள் நாடுகளில் உள்ள ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புருசல்ஸ்: ரஷ்ய சொத்துக்களை விற்று உக்ரைனை மறுசீரமைக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தலைவர் சார்லஸ் மிஷல் தெரிவித்துள்ளார்.



latest tamil news


உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடும் போர் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஐரோப்பிய யூனியன் தலைமை, நேட்டோ, அமெரிக்கா உள்ளிட்டவை தங்கள் நாடுகளில் உள்ள ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டன.

இதில் சொகுசு கப்பல்கள், சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகள், வங்கி கணக்குகள், ஹெலிகாப்டர்கள், கலைப் பொருட்கள், பிரபல ஓவியங்கள் உள்ளிட்டவையும் அடங்கும். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ள மேற்கண்ட முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்கள் குறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர் சார்லஸ் மிஷல் கருத்து தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஐரோப்பிய யூனியன் தங்கள் நாடுகளில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றை ஏலத்தில் விட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் திரட்டப்படும் நிதியை பாதிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


latest tamil news


மரியபோல், லவிவ், கீவ் உள்ளிட்ட நகரங்களை மறுசீரமைக்க இந்த நிதி உதவும் என்று கூறிய அவர், பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளும் ரஷ்ய சொத்துக்களை முடக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக உக்ரைன் அரசு இதுகுறித்து கூறுகையில் உக்ரைனில் சேதமடைந்த நகரங்களை மறுசீரமைக்க 600 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (8)

rmr - chennai,இந்தியா
06-மே-202214:12:46 IST Report Abuse
rmr dollar euro வர்த்தகம் இனி முடங்க போகுது .
Rate this:
Cancel
நல்லவன் - chennai,இந்தியா
06-மே-202213:31:57 IST Report Abuse
நல்லவன் ஓநாய் வேதனை படுகிறது - பாவம் ஆடு மழையில் நினைகிறதுன்னு. அவனுக்கு சண்டை போடுன்னு ஆயுதம் கொடுத்ததுக்கு கணக்கு காட்டி நீங்க ஆட்டைய போடத்தானே.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
06-மே-202212:09:41 IST Report Abuse
M  Ramachandran கடை தேங்காயை திருடி வழி பிள்ளாயாருக்கு உடைக்கும் கேசை அல்லவே தெரிகிறது. உங்கள் சிண்டு ரஸ்சியாவிடம் மாட்டி கொண்டிருக்கிறது அதை மறந்து விட வேண்டாம். அமெரிக்காவ நம்பினால் நட்டாற்றில் விட்டு சென்று விடும். ஜாக்கிரதையை நன்கு யோசித்து முடிவெடுக்கவும். வேண்டுமானால் நரேந்திர மோடி ஜி யை அணுகவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X