கட்சியில் எல்லாம் மாறியாச்சு; கட்டுப்பாடு கையை விட்டுப்போச்சு: கலகலக்கும் கமல் கட்சி!

Updated : மே 06, 2022 | Added : மே 06, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
மக்கள் நீதி மய்யம் கட்சியில், கமலுக்கு தெரியாமலேயே, அவர் கையொப்பமிட்ட அறிக்கைகள் வெளியாவதாக, கட்சியினர் புலம்புகின்றனர். இதனால், கட்சியின் கட்டுப்பாடு கமலிடம் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.மக்கள் நீதி மய்ய தலைவர் கமல், தேர்தல் தோல்வியை அடுத்து, 'பிக்பாஸ் மற்றும் விக்ரம்' பட வேலைகளில் தீவிரம் காட்டினார். தற்போது 'விக்ரம்' படத்தின் விளம்பர மற்றும் வியாபார
MNM, Kamalhaasan, Kamal, கமல், மக்கள் நீதி மய்யம், மநீம

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மக்கள் நீதி மய்யம் கட்சியில், கமலுக்கு தெரியாமலேயே, அவர் கையொப்பமிட்ட அறிக்கைகள் வெளியாவதாக, கட்சியினர் புலம்புகின்றனர். இதனால், கட்சியின் கட்டுப்பாடு கமலிடம் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல், தேர்தல் தோல்வியை அடுத்து, 'பிக்பாஸ் மற்றும் விக்ரம்' பட வேலைகளில் தீவிரம் காட்டினார். தற்போது 'விக்ரம்' படத்தின் விளம்பர மற்றும் வியாபார வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், கமல் கையொப்பமிட்ட பிறந்த நாள் வாழ்த்து அறிக்கை, யார் கேட்டாலும் தரப்படுவதாக, கட்சிக்குள் பலரும் புலம்ப துவங்கியுள்ளனர். ஊழல் புகார் காரணமாக, கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு, கமல் பிறந்த நாள் வாழ்த்து செய்தி வெளியானது தான், புலம்பலுக்கு காரணமாகி உள்ளது.


latest tamil news


இதுகுறித்து, கட்சி வட்டாரத்தில் கூறியதாவது: இரண்டாம் கட்ட தலைவர்களை தாண்டி, கமலை யாரும் நெருங்க முடிவதில்லை. தற்போது வெளியாகும் அறிக்கைகளை பார்த்தால், கமலுக்கு தெரியாமலேயே வெளியாகிறதா என்ற கேள்வி எழுகிறது. பொறுப்பில் இருந்து விலக்கப்பட்ட ஒருவர், மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்துள்ளார். அது இன்னும் பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. நீக்கப்பட்ட ஒருவருக்கு, கமல் பிறந்த நாள் வாழ்த்து செய்தி கூறியிருப்பது எப்படி?

கடந்த தேர்தலின்போது, கட்சி அலுவலகத்தில் 'போர் அறை' ஒன்று அமைக்கப்பட்டது. அதில், கமலின் கையொப்பமிட்ட வெற்று காகிதங்கள் நிறைய உள்ளதாக கூறப்படுகிறது. அதிலிருந்து இதுபோன்ற வாழ்த்து கடிதங்கள் தயாரிக்கப்பட்டு, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும், இரண்டாம் கட்ட நிர்வாகிகள் தந்திருக்கலாம் என தெரிகிறது.இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-மே-202217:15:26 IST Report Abuse
J.V. Iyer இவர் எடுக்கும் அடுத்த சினிமா கதையில், இவர் கட்சி அமைத்து, தலைவராகி, முதல்வராகி, பிரதமராகி,... எல்லாம் ஒரே பாடலில். அப்பப்பா.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
06-மே-202216:30:02 IST Report Abuse
raja கமல் இன்னும் பில்டு அவுட் ஆகலையா
Rate this:
Cancel
06-மே-202215:08:44 IST Report Abuse
ஆரூர் ரங் பேசாம கமல், சரத்குமார், T ராஜேந்தர் எல்லோரும் கட்சிகளை இணைத்து ரிடையர்டு நடிகர்கள் முன்னேற்றக் கழகம் 😇துவக்கலாம். விரைவில் இன்னொரு நடிகரான உதயநிதி யும் சேரும் வாய்ப்புள்ளது ( ஜி சதுரம் 😉 மூலமாக சபரி போடுற போடு அப்படி)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X