'அம்பேத்கரின் வில்லன் காந்தி'- திருமா பேச்சால் காங்., அதிர்ச்சி

Updated : மே 06, 2022 | Added : மே 06, 2022 | கருத்துகள் (100) | |
Advertisement
சென்னை: 'அம்பேத்கருக்கு வில்லனாக இருந்தவர் காந்தி,'' என, திருமாவளவன் பேசியதால், காங்கிரஸ் கட்சி கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரில், அம்பேத்கர்சேவா சமிதி நடத்திய பொதுக்கூட்டத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவண்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றனர். இந்த
VCK, Thirumavalavan, Gandhi, Villain, Ambedkar, விசிக, திருமாவளவன், காந்தி, வில்லன், அம்பேத்கர்

சென்னை: 'அம்பேத்கருக்கு வில்லனாக இருந்தவர் காந்தி,'' என, திருமாவளவன் பேசியதால், காங்கிரஸ் கட்சி கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில், அம்பேத்கர்சேவா சமிதி நடத்திய பொதுக்கூட்டத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவண்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ''இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரே, தேசத் தந்தை. எப்போதும் அம்பேத்கர் தான் இந்தியாவின் ஹீரோ. அந்த காலத்தில், அவருக்கு வில்லனாக இருந்தவர் காந்தி. இன்று வில்லனாக இருப்பவர் பிரதமர் மோடி,'' என்றார்.


latest tamil news


இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தலித் அமைப்பின் நிர்வாகி ஒருவர் மேடையேறி, திருமாவளவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பேசினார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில், அடுத்த ஆண்டு ஜனவரியில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், கூட்டணி கட்சி தலைவரும்,எம்.பி.,யுமான திருமாவளவன், மகாத்மா காந்தியை வில்லன் என பேசியது, கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர், இந்த விவகாரத்தை சோனியா, ராகுலின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். திருமாவளவன் பேசிய வீடியோவை, கர்நாடகா முழுதும், பா.ஜ.,வினர் பரப்பி வருவதும், காங்கிரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
07-மே-202208:43:22 IST Report Abuse
sankar 'அம்பேத்கருக்கு வில்லனாக இருந்தவர் காந்தி'- வீணாப்போன நெல்லை கண்ணனிடம் கேளுங்கள் - அவர் சொல்லுவார் - அவர்தானே இப்ப இவங்களுக்கு ஞானகுரு
Rate this:
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
09-மே-202210:37:04 IST Report Abuse
Sivramkrishnan Gkநெல்லை கண்ணன் வீணா போய்ட்டாரா, சொல்லவே இல்ல...
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
06-மே-202220:15:41 IST Report Abuse
Tamilan .....
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
06-மே-202219:51:20 IST Report Abuse
sankar மிக்க நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X