அனைத்து துறைகளிலும் ஊழல்: பழனிசாமி பரபரப்பு புகார்

Updated : மே 06, 2022 | Added : மே 06, 2022 | கருத்துகள் (41) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் ஊழல் இல்லாத துறை இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.சென்னை பட்டினபாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலை ஏற்காமல் அ.தி.மு.க.,
பழனிசாமி, அதிமுக, எடப்பாடி பழனிசாமி, இபிஎஸ், ஊழல், தருமபுர ஆதீனம், பட்டின பிரவேசம், சட்டசபை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் ஊழல் இல்லாத துறை இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.



சென்னை பட்டினபாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலை ஏற்காமல் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.



பின்னர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: விக்னேஷ் மரணம் தொடர்பான சி.பி.ஐ., விசாரணை நடத்தினால், நேர்மையாக நியாயமாக இருக்கும். இந்த மரணம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார். போலீசார் விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது.



latest tamil news


தருமபுர ஆதினத்தில் பல ஆண்டுகளாக பட்டின பிரவேச நிகழ்ச்சி நடக்கிறது. இது ஆன்மிக நிகழ்ச்சி. பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலங்காலமாக நடந்து வருகிறது. அங்கே தங்கியிருந்து பல்லக்கு தூக்குபவர்கள், பாரம்பரியமாக நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஆதீன எல்லைக்குள் தான் நடக்கிறது. இதற்கு தடை செய்ய அதிகாரம் இல்லை. ஆனால், திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக பட்டின பிரவேச நிகழ்ச்சியை தடை செய்தது கண்டிக்கத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்த மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது கண்டிக்க தக்கது. ஆன்மிகத்தில் அரசு தலையிடுவதை ஏற்று கொள்ள முடியாது.



முதல்வர் பொதுவானவர். அவர் எந்த கட்சியையும், மதத்தையும் சாராதவர். பல்வேறு மதங்களை சேர்ந்த பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை என கேள்வி எழுப்பினோம். அதற்கு பதில் கிடைக்கவில்லை. முதல்வர் பொதுவானவராக இருக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். மக்களின் விருப்பமும் கூட.



தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. ரவுடிகள் சுற்றுலா செல்வது போல உலா வருகின்றனர். போதை பொருட்கள் அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக விற்பனையாகிறது. தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிகளவு விற்பனையாகின்றன. கடந்த ஓராண்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. ஊழல் இல்லாத துறை இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. திறமையற்ற அரசு என ஓராண்டில் நிரூபணம் ஆகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ
07-மே-202200:46:48 IST Report Abuse
SexyGuy . நீங்களெல்லாம் வாயை திறந்து பேச எந்த ஒரு தகுதியும் இல்லை , உங்கள் கட்சியில் யாருக்குமே.
Rate this:
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
06-மே-202222:04:58 IST Report Abuse
Palanisamy T அனைத்து துறைகளிலும் ஊழல் நீங்கள் சொல்லித்தான் புரிய வேண்டிய அவசிய மில்லை. அதைச் சொல்லித்தான் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். என்ன செய்தீர்கள் ஒருப் பெரியக் கோட்டை சிறியதாக மாற்ற வேண்டுமானால் அதைவிட பெரியக் கோட்டை அங்கே போடவேண்டும். நீங்கள் மட்டும் நல்லாட்சியை- ஆதாவது தூய்மை யான ஆட்சியை கொடுத்திருந்தால் இன்றைக்கு நீங்கள் இப்படிப் புலம்ப வேண்டிய அவசிய மில்லை. நன்குப் படித்த ஜெயா அம்மையார் அவர்களும் மக்கள் கொடுத்த நல்வாய்ப்பை சரியாக பயன் படுத்த வில்லை. திமுக மற்றும் அதிமுக ஆகிய இருவரும் ஒருவரோடு ஒருவர் இப்படி மாறி மாறிச் ஒருவர் மேலொருவர் சேற்றை வாரி வீசிக் கொண்டிருந்தாள் நாளையோ நாளை மறுநாளோ மக்களே விரும்பாவிட்டாலும் பாஜக ஆட்சியை பிடிக்கலாம். இப்போது தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவர் நீங்களா அல்லது அண்ணாமலையா என்று இன்னும் தெரிய வில்லை அந்த அளவிற்கு அவர் வளர்ந்து வருகின்றார்.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
06-மே-202221:33:26 IST Report Abuse
sankar ஆஹா, இவர் எப்பேர்ப்பட்ட உத்தமர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X