காரிமங்கலம் பஸ்சில் தொங்கியபடி பயணித்த 'காரிகைகள்': பார்த்தவர்கள் பகீர்

Updated : மே 06, 2022 | Added : மே 06, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அரசு மகளிர் கலை கல்லூரி மாணவிகள், போதிய பஸ்கள் இல்லாததால், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம், வரலாறு, பிகாம், பிபிஏ, பி.எஸ்சி கணிதம், கணினி
பஸ்கள், தர்மபுரி, மாணவிகள், படிக்கட்டு பயணம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அரசு மகளிர் கலை கல்லூரி மாணவிகள், போதிய பஸ்கள் இல்லாததால், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம், வரலாறு, பிகாம், பிபிஏ, பி.எஸ்சி கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், புள்ளியல், காட்சி தொடர்பு ஊடகவியல்(visual communication) உள்ளிட்ட 13 பாடப்பிரிவுகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வரும் நிலையில், இந்த கல்லூரிக்கு போதிய பஸ் வசதி இல்லை. தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள போதிலும், குறிப்பிட்ட சில பஸ்கள் மட்டுமே நின்றுச் செல்கின்றன. இதனால், அந்த ஒரு சில பஸ்களில் முண்டியடித்துக்கொண்டு மாணவிகள் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.
கல்லூரி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை.


latest tamil newsஇந்நிலையில், கல்லூரி முடிந்து தருமபுரி செல்லும் பேருந்து ஒன்றில் கனரக வாகனங்களுக்கு மத்தியில் பஸ் படிக்கட்டியில் தொங்கியபடி மாணவிகள் சிலர் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். பெரியாம்பட்டி பிரிவு பகுதியில் இதனை தனது செல்போனில் பதிவு செய்த நபர் ஒருவர் இணையத்தில் பதிவு செய்த நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07-மே-202200:28:07 IST Report Abuse
Ramesh Sargam பெங்களூரு பஸ்களில் இருப்பதுபோல் பயணிகள் ஏறியவுடன் மூடும் கதவு பொருத்தவேண்டும். மக்களுக்கே புத்தி இருக்கவேண்டும்.
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
06-மே-202219:48:32 IST Report Abuse
Manguni vidiyal. rendu bus விட தெரில.. இதுல பேச்சை பாரு..
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
06-மே-202218:26:09 IST Report Abuse
Kasimani Baskaran பொங்கல் தொகுப்பு கொடுக்காம்லிருந்தால் இன்னும் நிறைய பேருந்துகள் வாங்கி விட்டிருக்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X