ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதை தடை செய்ய முடியாது: ஐகோர்ட் வக்கீல் கருத்து

Updated : மே 06, 2022 | Added : மே 06, 2022 | கருத்துகள் (76) | |
Advertisement
சென்னை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் விழாவை மாவட்ட கோட்டாட்சியர் தடை விதித்தார். இதற்கு பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. குருவை சிஷ்யர்கள் சுமப்பது என்ன தவறு என பலர் பதிலுக்கு கேட்கின்றனர்.இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராம. அருண் சுவாமிநாதன் கூறியதாவது:பல்லக்கை [Palantquine]
தருமபுர ஆதீனம், பட்டின பிரவேசம், பல்லக்கு, கோட்டாட்சியர், வழக்கறிஞர், ஐகோர்ட், சென்னை ஐகோர்ட், சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றம், chennai highcourt, highcourt, lawer,advocate, dharmapuram, aadhenam, RDO,  திராவிடர் கழகம், சட்டம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் விழாவை மாவட்ட கோட்டாட்சியர் தடை விதித்தார். இதற்கு பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. குருவை சிஷ்யர்கள் சுமப்பது என்ன தவறு என பலர் பதிலுக்கு கேட்கின்றனர்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராம. அருண் சுவாமிநாதன் கூறியதாவது:பல்லக்கை [Palantquine] சுமந்து செல்வது அடிமைத்தனம் என்று கூறிவரும் தி.க வினர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் காலங்காலமாக நடக்கும் மதிப்புமிகு தருமபுர ஆதீனம் அவர்களின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி வருவாய் கோட்டாட்சியர் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 23-ன் கீழ் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 என்னவென்றால், "Traffic in human beings and beggar and other similar forms of forced labour are prohibited and any contravention of this provision shall be an offence punishable in accordance with law". என மேற்படி சட்டப் பிரிவை படிக்கும் போது, 'மனிதர்களை கடத்துவதும், கொத்தடிமை மனிதர்களை பணியில் வைத்தலும் குற்றம் கூறுகிறது.

பட்டினப் பிரவேசத்தில் கொத்தடிமைகள் ஈடுபடுகிறார்களா? Forced labour மூலம் ஆதீனகர்த்தரை தூக்கி சென்றால் அது குற்றமாக கொள்ளலாம். சீடர்கள், தம்பிரான்கள், ஆதீன கர்த்தர் அவர்களை ஆசானாக ஏற்றுக்கொண்ட மெய்யன்பர்கள் தாமாக முன்வந்து பல்லக்கில் பிரவேசிக்க வைப்பது கொத்தடிமைகள் என்ற பொருளில் வருமா??


latest tamil news


International Labour Organization (ILO) பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின், 1930 ஆண்டின் கட்டாய தொழிலாளர் மாநாட்டின் படி, Forced Labour என்பதை கீழ்கண்டவாறு வரையறை செய்யப்பட்டுள்ளது.
"All work or service which is exacted from any person under the threat of a penalty and for which the person has not offered himself or herself voluntarily."

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 இல், other similar forms of forced labour என்றே உள்ளது. இந்த வைபவத்தில் forced labour எவரும் இல்லை. இருப்பினும் அதே அரசியலமைப்பு சட்டம் பிரிவு 26(b)-ன் படி to manage Its own affairs in matters of religion; எனும் வகையில் மத சம்மந்தமான தனது தனிப்பட்ட விவகாரங்களை கவனித்து கொள்ள உரிமை அளிப்பட்டுள்ளதால், சைவ சமயத்தை சார்ந்த மட நிகழ்வில் கோட்டாட்சியர் தலையிட எவ்வித அதிகாரமுமில்லை.

ஒருவேளை இந்து மதத்தை வெளிப்படையாக வெறுக்கும் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தாலும், பிரச்னை செய்ய முன் வந்தாலும் அவர்கள் மீது தான் கோட்டாட்சியர் CRPC படி நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர பல நூற்றாண்டுகளாக நடைபெறும் ஒரு வழக்கத்தை தடை செய்ய வருவாய் துறைக்கோ, காவல் துறைக்கோ எவ்வித அதிகாரமுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07-மே-202200:38:30 IST Report Abuse
Ramesh Sargam ஆனால், திமுகவினருக்கு 'சொம்பு' தூக்கும் அல்லக்கைகளை உடனே தடை செய்யவேண்டும்.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
06-மே-202217:24:50 IST Report Abuse
GMM சட்டம் வருவாய் கோட்டாட்சியர் பல்லக்கு தூக்குவதை தடை செய்ய அதிகாரம் அளிக்கிறது.? சமய நிகழ்ச்சி. முன் பல ஆண்டுகள் நடந்துள்ளன. பல RDO பணி செய்து இருப்பர். சில கட்சிகள் ஆட்சி புரிந்து விட்டன. இது குற்றம் என்றால் குறைந்தது தனக்கு முந்தய RDO அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும். தற்போது மட்டும் தடை ஏன்? முந்தய காங்கிரஸ்,திமுக, அண்ணா திமுக ஆட்சியில் உத்தரவிட நேரம் இல்லை? சட்ட விதி நிலையானது. அரசு அதிகாரிகள் நடவடிக்கை கட்சி, சாதி மற்றும் மதத்திற்கு தகுந்தாற்போல் நிலையற்றது.? பிஜேபி ஆட்சியில் இருந்தால் இதே RDO விழாவை துவக்கி வைத்து இருப்பர். ஈனம் ஒன்றே பெரிது? HC வக்கீல் கருத்து தெளிவாக உள்ளது. பிரிட்டிஷ் காலனி சட்டம் காப்பி அடிக்கப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
06-மே-202216:58:38 IST Report Abuse
Svs Yaadum oore //..அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 "Traffic in human beings and beggar and other similar forms of forced labour are prohibited...//...தேனாம்பேட்டையில் இந்த சட்டம் உடனடியாக அமல் படுத்த வேண்டும் . வாரிசு ஹம்மர் காரில் செல்லும்போது சுற்றி 30 நபர்கள் காரில் வெளவால்போல் தொங்கி செல்வது , கொத்தடிமைகள் சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X