கைதி மரண விவகாரத்தில் போலீசார் மீது. வழக்குப் பதிவு!

Updated : மே 08, 2022 | Added : மே 06, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை :சென்னை காவல் நிலையத்தில், விசாரணை கைதி மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தில், போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இறந்த கைதிவிக்னேஷ் உடலில் காயங்கள் இருப்பதால், இந்த சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளதாக, சட்டசபையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: திருப்பூர்
கைதி மரண விவகாரம் , போலீசார் மீது...

சென்னை :சென்னை காவல் நிலையத்தில், விசாரணை கைதி மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தில், போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இறந்த கைதிவிக்னேஷ் உடலில் காயங்கள் இருப்பதால், இந்த சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளதாக, சட்டசபையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: திருப்பூர் மாவட்டம், ரெட்டிப்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த பழனிசாமி, அவரது மனைவி வள்ளியம்மாள் ஆகியோரை மர்ம நபர்கள் கொலை செய்து, தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்று உள்ளனர். ஈரோடு மாவட்டம், உப்பிலிபாளையம் ஓடைக்காடு பகுதியில், துரைசாமி என்பவரை கொலை செய்து, அவரது மனைவி ஜெயமணியை தாக்கி, நகைகளை பறித்து சென்று உள்ளனர்.தற்போது பெரும்பாலான முதியோர், கிராமங்களில் தனியாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை.தனியாக வசிக்கும் முதியோர் கொலை செய்யப்படுவது, மக்க ளிடையே அச்சத்தைஏற்படுத்தி உள்ளது.

எனவே, தமிழக காவல் துறை, குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். தனிமையில் வசிக்கும் முதியோருக்கு, உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.சென்னையைச் சேர்ந்த விக்னேஷ், போலீஸ் விசாரணையின்போது இறந்தார். உடற்கூராய்வு முடிவில், அவர் உடலில் 13 காயங்கள் இருந்தது தெரிய வந்து உள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது, கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். முறையான விசாரணை நடக்க, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்: தற்போது கிடைத்துள்ள உடற்கூராய்வு முடிவுகளின்படி, விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில், அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுஉள்ளது; காவலர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. விசாரணையை தொடர்ந்து நடத்த, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடந்த கொலை, கொள்ளைசம்பவங்கள் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் செய்தவர்களை கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இரண்டு சம்பவங்கள் குறித்த முதல் கட்ட விசாரணையில், தாக்குதல் நடந்த விதம், கொள்ளை அடிக்கப்பட்ட முறை ஒன்று போல் இருப்பதால், இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என தெரிய வருகிறது.இது குறித்து, கோவை சரக டி.ஐ.ஜி., தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர். இவ்வாறு விவாதம் நடந்தது.போலீஸ் கமிஷனருக்கு ஆணையம் உத்தரவு!போலீஸ் காவலில் இளைஞர் விக்னேஷ் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய, மாநில மனித உரிமைகள் ஆணைம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக் கத்தியுடன் வந்ததாக சுரேஷ், விக்னேஷ் ஆகியோரை, ஏப்ரல் 18-ல் தலைமை செயலக காலனி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும், காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, விக்னேஷ் சந்தேகமான முறையில் மரணம் அடைந்தார்.விசாரணையின்போது வலிப்பு வந்து, விக்னேஷ் மரணம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் விக்னேஷ் மரணம் அடைந்ததாக, அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். போலீசார் துரத்திச் சென்று தாக்கும் 'வீடியோ' காட்சிகளும் வெளியாகின.
அதைத் தொடர்ந்து, சப்- - இன்ஸ்பெக்டர் புகழும்பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், விக்னேஷ் மரணம் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த, ஆணையத்தின் தலைவர் எஸ்.பாஸ்கரன், “போலீஸ் காவலில் விக்னேஷ் மரணம் அடைந்தது குறித்து, நான்கு வாரங்களில் சென்னை போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என உத்தரவிட்டார்.

9 போலீசாரிடம் விசாரணை

வாலிபர் விக்னேஷ் அடித்து கொல்லப்பட்டாரா என்பது குறித்து, இன்ஸ்பெக்டர் உட்பட ஒன்பது போலீசாரிடம், சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.வாலிபர் விக்னேஷ் மரணம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., சரவணன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று, சி.பி.சி.ஐ.டி., - டி.ஜி.பி., ஷகீல் அக்தர் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ.,க்கள் புகழும் பெருமாள், கணபதி. போலீஸ்காரர் பொன்ராஜ், முனாப், கார்த்திக், குமார், ஆனந்தி மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகிய ஒன்பது பேரிடம், நேற்று காலை 10:30 மணிக்கு விசாரணையை துவக்கினர். விசாரணை இரவிலும் நீடித்தது. நேரடி தொடர்புஉடைய போலீசார் மீது, கொலை வழக்கு பதிந்து, கைது செய்யப்படலாம் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.5 போலீசாரை கைது செய்ய கமிஷன் கடிதம்விக்னேஷ், சுரேஷ் ஆகியோர் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இதனால், தேசிய எஸ்.சி., - எஸ்.டி., கமிஷன் விசாரித்து வருகிறது. அதன் துணை தலைவர் அருண் ஹல்தர், டி.ஜி.பி., சைலேந்திரபாபு, தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோருக்கு நேற்று அனுப்பிஉள்ள கடிதம்: விக்னேஷ், சுரேஷ் ஆகியோரை அடித்து சித்ரவதை செய்த ஐந்து போலீசாரை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கில் இருந்து சுரேஷை விடுவிக்க வேண்டும். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.வாக்குமூலம் அளித்துள்ள ஆட்டோ ஓட்டுனர் பிரபு; அவரது குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். விக்னேஷ் குடும்பத்தினருக்கு, எஸ்.சி., - எஸ்.சி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அ.தி.மு.க., வெளிநடப்பு!விக்னேஷ் மரணம் தொடர்பான விவாதத்தில், முதல்வர் பதில் அளித்த பின், எதிர்க்கட்சி தலைவர்பழனிசாமி பேசியதாவது:விக்னேஷ் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இந்த வழக்கை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கவலியுறுத்தினோம்.சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைத்து உள்ளதாக முதல்வர் தெரிவித்தார்; இதில் உடன்பாடு இல்லை.விசாரணை நேர்மையாக நடக்க, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்காததால், வெளிநடப்பு செய்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார். அதைத் தொடர்ந்து,அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள்வெளியேறினர்.Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.S.Jayagopal - Salem,இந்தியா
07-மே-202218:12:15 IST Report Abuse
M.S.Jayagopal இறுதி முடிவு ஒன்றும் இல்லை. கண் துடைப்பு ,கண்துடைப்பு.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
07-மே-202213:23:09 IST Report Abuse
Duruvesan விடியல் எல்லோருக்கும் 😪
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
07-மே-202213:21:32 IST Report Abuse
Matt P .தனியாக வசிக்கும் முதியோர் கொலை செய்யப்படுவது, மக்க ளிடையே அச்சத்தைஏற்படுத்தி உள்ளது. என்கிறார். குடும்பத்தோடு வசித்தபோது ஸ்டாலின் நண்பர்கள் பலர் கூட கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் ஆட்சி இலே அவர்களையும் காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும். இந்திய பிரதமர் ராஜீவை கொன்றவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும். அப்பாவிகள் சிறையில் வாடுகிறார்கள் அவர்களை விடுவிக்க வேண்டும்,. தண்ணியில கிடக்க கூடிய முதலை கண்ணீர் விட்டுதுன்னு எப்படி சொல்ல முடியும். எல்லாம் ஒரு நம்பிக்கை தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X