ஜப்பான் பிரதமர் ராஜினாமா

Added : ஆக 27, 2011 | |
Advertisement
டோக்கியோ: ஜப்பான் பிரதமர் நவோடோ கான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று டி.வி.,யில் தோன்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் திங்கட்கிழமைக்குள் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரையில் பதவியில் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஜப்பான் நாட்டில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும்

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் நவோடோ கான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று டி.வி.,யில் தோன்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் திங்கட்கிழமைக்குள் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரையில் பதவியில் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஜப்பான் நாட்டில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும் புகுஷிமா பகுதியில் இருந்த அணுமின் நிலையத்திற்குள் புகுந்த கடல் நீரால் அணுகதிர் வீச்சு பாதிப்பு உருவாகும் என்ற அச்சம் மக்கள் மனதில் தோன்றியது. இதனால் பிரதமர் செல்வாக்கு சரிய துவங்கியது. இதனையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில் ஆறாவது பிரதமராக இவர் பதவி வகித்துள்ள இவர் 15 மாதங்கள் மட்டுமே பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு அடுத்தபடியாக பிரதமர் பதவிக்கு ஏற்றவர்களாக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்ஜி மகேரா, நிதியமைச்சர் யோஷிஹிகோ நோடா, மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பன்ரி கெயிடா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X