தமிழகத்திற்கு கிடைத்தது 7 கோடி கிலோ நிலக்கரி

Updated : மே 07, 2022 | Added : மே 07, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை :முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, ஒடிசாவில் உள்ள சுரங்கங்களில் இருந்து, தமிழகத்திற்கு நீண்ட நாட்களுக்கு பின் நேற்று, 7 கோடி கிலோ நிலக்கரியை அனுப்பிஉள்ளது.துாத்துக்குடி, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் தினமும் முழு மின் உற்பத்திக்கு, 7.20 கோடி கிலோ நிலக்கரி
தமிழகம், 7 கோடி கிலோ , நிலக்கரி

சென்னை :முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, ஒடிசாவில் உள்ள சுரங்கங்களில் இருந்து, தமிழகத்திற்கு நீண்ட நாட்களுக்கு பின் நேற்று, 7 கோடி கிலோ நிலக்கரியை அனுப்பிஉள்ளது.
துாத்துக்குடி, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் தினமும் முழு மின் உற்பத்திக்கு, 7.20 கோடி கிலோ நிலக்கரி தேவை.
இந்த நிலக்கரி, ஒடிசாவில் உள்ள சுரங்கங்களில் இருந்து அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக, தினமும், 5 கோடி கிலோவுக்கு குறைவாகவே தமிழகத்திற்கு நிலக்கரி அனுப்பப்பட்டது. இதனால், அனல் மின் நிலையங்களில் முழு அளவில் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.தமிழகத்திற்கு தினமும், 7.20 கோடி கிலோ நிலக்கரி வழங்குவதை உறுதி செய்யுமாறும்; அந்த நடவடிக்கையால் மட்டுமே தடையில்லாமல் மின் வினியோகத்தை பராமரிக்க முடியும் என்றும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஏப்., 22ல் கடிதம் எழுதினார்.


latest tamil news




அந்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு தற்போது, தமிழகத்திற்கு கூடுதல் ரயில்களில் நிலக்கரி அனுப்பி வருகிறது. சில தினங்களாக ரயில்களில், 5.30 - 5.40 கோடி கிலோ நிலக்கரி அனுப்பப்பட்ட நிலையில், நேற்று, 7 கோடி கிலோ நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது.இதே நிலை தொடரும் பட்சத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது. நேற்றைய நிலவரப்படி, அனல் மின் நிலையங்களில் மூன்று நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan Bala - Chennai,இந்தியா
08-மே-202206:59:09 IST Report Abuse
Saravanan Bala இதையே கிராம் கணக்கில் அல்லது மில்லி கிராம் கணக்கில் சொல்லியிருக்கலாம்😜
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
07-மே-202218:42:45 IST Report Abuse
sankar தென்னகத்தின் - "கரிபால்டி" என்று பட்டம் கொடுக்க போறாங்களாம் விடியலுக்கு
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
07-மே-202215:28:02 IST Report Abuse
Sai /////
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X