பஞ்சு விலையை தொடர்ந்து நூல் விலை உயர்வு; ஜவுளி உற்பத்தியாளர் அடுத்த கட்ட நடவடிக்கை

Updated : மே 07, 2022 | Added : மே 07, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பல்லடம் : திருப்பூர் தொழில் துறையினருடன் இணைந்து ஆலோசித்த பின், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக, பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.சமீப நாட்களாக, பஞ்சு விலையை தொடர்ந்து, நுால் விலை அதிகரித்து வருவது, ஜவுளி தொழில் துறையினரை கவலையில் ஆழ்த்தி வருகிறது. இது குறித்து சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்ட பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள், 15

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பல்லடம் : திருப்பூர் தொழில் துறையினருடன் இணைந்து ஆலோசித்த பின், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக, பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.சமீப நாட்களாக, பஞ்சு விலையை தொடர்ந்து, நுால் விலை அதிகரித்து வருவது, ஜவுளி தொழில் துறையினரை கவலையில் ஆழ்த்தி வருகிறது.



latest tamil news



இது குறித்து சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்ட பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள், 15 நாட்களுக்கு புதிதாக நுால்கள் வாங்குவதில்லை எனவும், உற்பத்தியை, 50 சதவீதமாக குறைப்பது என்றும் தீர்மானித்தனர்.ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:இன்றைய நுால் விலை உயர்வு என்ன? நாளை என்ன விலை உயரும் என்ற அச்சத்துடனேயே தொழில் செய்து வருகிறோம்.

துணி விலையை நிர்ணயித்து விற்பனை செய்வதற்குள் நுால் விலை உயர்ந்து விடுகிறது. இதனால், துணிக்கான விலையை தீர்மானிக்க முடிவதில்லை.நுால் விலை உயர்வுக்கு ஏற்ப துணி விலையை உயர்த்தினால், உயர்த்திய விலைக்கு வியாபாரிகள் துணிகளை வாங்க மறுக்கின்றனர். வியாபாரம் சரியில்லை எனவும், மார்ச் மாத விலைக்கு துணிகளை வழங்குமாறும் கூறுகின்றனர்.விலை கிடைக்காமல் ஏற்கனவே துணிகள் இருப்பு வைத்துள்ள நிலையில், கூடுதல் விலை கொடுத்து நுால் வாங்கி புதிதாக துணி உற்பத்தி மேற்கொள்வது இயலாது.


latest tamil news



இதனால், துணி உற்பத்தி மேற்கொள்ள இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஏற்கனவே பலர் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர்.பஞ்சு பதுக்கலை கட்டுப்படுத்தி, ஏற்றுமதிக்கு தடை விதிக்காவிட்டால், தொழில் மேலும் நலிவடைந்து விடும். மேலும், பல்லடத்தில், தற்போது, 50 சதவீத உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது.இதே நிலை நீடித்தால், துணி உற்பத்தி ஒட்டுமொத்தமாக வட மாநிலங்களுக்கு சென்று விடும். திருப்பூர் தொழில் துறையினருடன் இணைந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-மே-202216:41:00 IST Report Abuse
அப்புசாமி நூல் வஇ ஏறினா, வடமாநிலக்காரங்களுக்கு மட்டும் எப்பிடி கட்டுப்படியாகும்? இங்கே பஞ்சம் பொழைக்க வராங்க. அங்கே எப்பிடிபொழைப்பு ஓடும்?
Rate this:
Cancel
karthi -  ( Posted via: Dinamalar Android App )
07-மே-202212:13:00 IST Report Abuse
karthi நூல் விலை குறைந்தால் பருத்தி விலை குறையும் பருத்தி விலை குறைந்தால் பாதிக்கபடுவது விவசாயிகள் லாபம் அடைவது விபாரிகள் இதில் சில சமூக ஆர்வலர்கள் இதில் பாதிக்கபடுவது மக்கள் என்பார்கள் இதில் விவசாயிகள் அதை உற்பத்தி செய்ய ஏற்படும் கஷ்டம் யாருக்கும் தெரியாது
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
07-மே-202212:03:55 IST Report Abuse
Lion Drsekar பஞ்சு மட்டும் இல்லை, பேப்பர் விலை ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விலை ஏறிக்கொண்டே போகிறது . காய்கனிகள் விலை பரவாயில்லை, , வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X